நீங்கள் கேட்டவை : ஜவ்வாது கொடுக்கும் புனுகுப் பூனை!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
புறா பாண்டி

‘‘தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழகத்தின் மூலம் வழங்கப்படும் தொலைநிலைக் கல்வி குறித்த விவரங்களைச் சொல்லுங்கள்..?’’

ஆர்.சுதா, வேலூர்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் இயக்குநர் முனைவர் அசோகன் பதில் சொல்கிறார்.

‘‘தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் மூலம், 11 சுயவேலைவாய்ப்புப் பயிற்சிகள், 15 செயல்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், 22 அஞ்சல் வழிச் சான்றிதழ் பயிற்சிகளை வழங்கி வருகிறோம். இந்தப் பயிற்சித் திட்டங்களுக்கான சேர்க்கை, ஆண்டு முழுவதும் நடைபெற்று வருகிறது. பயிற்சித் திட்டங்களில் சேர, வயது வரம்பு கிடையாது. 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பயிற்சியில் சேரலாம். இவை அனைத்தும் கட்டணப் பயிற்சிகள்.

பால் பண்ணை சம்பந்தமாக கால்நடைப் பண்ணை மேலாளர், பால் பண்ணை உதவியாளர், பால் பதன நிலைய உதவியாளர், பால் மற்றும் பால் பொருட்கள் தரக் கட்டுப்பாடு உதவியாளர் என நான்கு செயல்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் உள்ளன. இவற்றில் ஒவ்வொரு பயிற்சிக்கும் அதற்கான கல்வித் தகுதியும் கால அளவும் உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்