பஞ்சகவ்யா - 11

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
வெற்றி விவசாயிகளின் அசத்தல் அனுபவத் தொடர்ஜி.பழனிச்சாமி, படங்கள்: ரமேஷ் கந்தசாமி, க.சத்தியமூர்த்திபலாவுக்கு ருசி கூட்டிய பஞ்சகவ்யா...இளம் விவசாயியின் இயற்கை விவசாயம்!

ரம்பகாலத்தில் பஞ்சகவ்யாவைப் பயன்படுத்தியவர்கள், அதை விவசாயிகளிடம் பரவலாகக் கொண்டு சேர்த்தவர்கள் குறித்த பதிவுகள் இடம்பெறும் தொடர் இது. அந்தவரிசையில் தனது அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறார், ஈரோடு அடுத்துள்ள நத்தக்காடையூர் பகுதியைச் சேர்ந்த இளம்விவசாயி எஸ்.சக்திவேல்.

தென்னை, பலா, முள்சீதா, நாவல், துரியன், ஜாதிக்காய், மிளகு என அடர்ந்து பரவிக்கிடக்கும் தோப்பு. உயிர்மூடாக்காக களைச்செடிகள் படர்ந்து கிடக்கின்றன. கிளுவைப் போத்துக்களால் வேலி அடைத்த தோப்பினுள் நாட்டுமாடுகள், செம்மறி ஆடுகள், நாட்டுக்கோழிகள், வாத்துக்கள் என மேய்ந்துகொண்டிருக்கின்றன. ஆங்காங்கே தேனீ வளர்ப்புப் பெட்டிகள், ஒரு மீன் வளர்ப்புக் குளம் என ஒருங்கிணைந்த பண்ணையத்துக்கான அத்தனை அடையாளங்களும் அங்கு இருக்க... ஒரு வனத்துக்குள் நுழைந்த உணர்வை ஏற்படுத்தியது, சக்திவேலின் பண்ணை.

தூறல்மழை விட்டுவிட்டு பெய்துகொண்டிருந்த ஒரு காலைவேளையில் மீன்களுக்கு பஞ்சகவ்யா கரைசலைக் கொடுத்துக் கொண்டிருந்த சக்திவேலைச் சந்தித்தோம். அப்பா சுப்பிரமணியன், அம்மா தங்கமணி ஆகியோரை நமக்கு அறிமுகம் செய்து வைத்து விட்டு உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.

“எங்க சொந்த ஊர் இதுதான். மொத்தம் நாலரை ஏக்கர் நெலம் இருக்கு. ரெண்டு வருஷத்துக்கு ஒருவாட்டி எல்.பி.பி. கால்வாய் தண்ணீர் கிடைக்கும். மத்த நாட்களில் கிணத்துப்பாசனம்தான். நான், வீட்டுக்கு ஒரே பையன்ங்கிறதால படிப்பு முடிச்சதும் விவசாயத்துக்கு வந்துட்டேன். ஆரம்பத்துல நானும் ரசாயன விவசாயம்தான் செஞ்சேன். இப்போ 7 வருஷமாதான் இயற்கை விவசாயம் செஞ்சுக்கிட்டிருக்கேன். நான் இயற்கைக்கு மாறுனதுக்குக் காரணம், ‘பஞ்சகவ்யா சித்தர்’ டாக்டர்.நடராஜன்தான்.

ஒரு முறை ஈரோட்டுல நடந்த மரம் வளர்ப்பு கருத்தரங்குல கலந்துகிட்டு எதேச்சையா டாக்டரைப் பார்த்துப் பேசினேன். அப்போ, எங்க தோட்டத்துல வெளையுற பலா ருசியாவே இல்லைனு சொன்னேன். உடனே அவர், தன் கையில வெச்சிருந்த பஞ்சகவ்யா புத்தகத்தை என்னிடம் கொடுத்து... ‘இதுல பஞ்சகவ்யா செய்முறை,  அதை பயிர்களுக்குப் பயன்படுத்தற முறை குறித்து இருக்கு. இதுல உள்ளபடி பலா மரத்துக்கு கொடுத்துட்டு வாங்க. அடுத்த சீசன்ல காய்க்கிற பலா கண்டிப்பா ருசியா மாறிடும். அதுக்கப்பறம் வந்து என்னைப் பாருங்க’னு சொன்னார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்