மண்புழு மன்னாரு: வெள்ளத்துக்கு சங்கதி சொன்ன சங்கு மண்டபம்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ம்ம மாநிலத்தை தண்ணீர் பிரச்னைக்காக பக்கத்து மாநிலங்களோட சண்டை போட வைக்காத ஒரே நதி தாமிரபரணிதான். பொதிகை மலையில உற்பத்தியாகும் இந்த நதிதான் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களோட தாகத்தைத் தீர்த்து, பசுமையைக் கொழிக்க வைக்குது.

இந்த தண்ணியில தாமிரச்சத்து கலந்திருக்கிறதால, இந்த நதிக்கு தாமிரபரணினு காரணப் பெயர் வந்திருக்கும்னு சொல்றாங்க. அதாவது, பொதிகை மலை உச்சியில பூங்குளம்ங்கிற இடத்துல இருந்துதான், தாமிரபரணி நதி உற்பத்தியாகுது. இந்தப் பூங்குளம் பகுதியிலதான், அகத்தியர் கோயில் இருக்கு. இதை தரிசிக்க ஆண்டுதோறும், குறிப்பிட்ட சில  மாசம் தமிழ்நாட்டு பக்தர்கள், கேரளா வழியாகத்தான் மலைக்குப் போறாங்க. ஏன்னா, தமிழ்நாட்டு எல்லைவழியா சொரிமுத்து அய்யனார் கோயிலைத் தாண்டி மேல ஏறிப்போக முடியாது. காரணம், நம்ம வனத்துறையோட கட்டுப்பாடுதான். பொதிகை மலைப் பயணம் ஏறத்தாழ டிஸ்கவரி சேனல்ல வர்ற ‘பியர் கிரில்ஸ்’ (Bear Grylls) நிகழ்ச்சிக்கு சமமா இருக்கும்.

தாமிரபரணி உற்பத்தியாகி வர்ற வழியில சில மரங்களோட இலைகள்லயும், பாறைகள்லயும், தாமிரச்சத்து இருக்கிறதாவும், அந்தச் சத்து தண்ணியோட கலந்து வருதுனும் சொல்றதுண்டு. அறிவியல்பூர்வமாவே, இந்த தண்ணியில தாமிரச்சத்து இருக்குனு கண்டுபுடிச்சிருக்காங்க.
பதார்த்த குண சிந்தாமணி’யில...

“தாம்பிரவாற் றுப்புனலால் சுரமும் பித்துவிழித்தும்பிரமுட் காய்ச்சல் சுவாச நோய் - சோம்பிமிகக்கக்குகய மென்புருக்கி கைகா லெரிவடனேமிக்குறுதா கங்களும்போம் விள்”னு எழுதி வெச்சிருக்காங்க. அதாவது தாமிரபரணி தண்ணி எல்லா வகைக் காய்ச்சல், பித்ததோஷம், கண்புகைச்சல், உள்சுரம், சுவாச ரோகம், கக்குவான், என்புருக்கி, கை, கால் எரிச்சல், மிகுந்த நீர்வேட்கை ஆகிய நோய்களைத் தீர்க்கும்ங்கிறதுதான், அந்தப் பாட்டோட பொருள்.

தாமிரபரணி ஆறு, மலையில இருந்து, இறங்கி பாபநாசம் வழியா நடந்து, தூத்துக்குடி மாவட்டம் புன்னகாயல் பகுதியில கடல்ல கலக்குது. இந்தப் பாட்டுல சொல்லி வெச்சிருக்கிற பலன் இந்த காலத்துக்குப் பொருந்துமானு கேட்கப்படாது.  இந்தக் காலத்துல பல விதமான ரசாயன கழிவுகள் கலந்துதான், தாமிரபரணி கடலுக்குள்ள போய் சேருது. குறைஞ்சபட்சம் பாபநாசம் வரையிலும், வேணும்னா தண்ணி தூய்மையா இருக்கலாம். அதுக்கும் கீழ இறங்க, இறங்க தண்ணியோட தரம் மாறி, உருமாறிடுது. தாமிரபரணியில வெள்ளப்பெருக்கு உருவாகி, கடல் தண்ணியில கலந்தாதான், சுத்துப்பட்டுல நல்ல மழையும், கடலுக்குள்ள மீன் வளமும் பெருகும். நன்னீர் கடல்ல, கலக்குற பகுதிகளிலிருந்துதான் மேகங்கள் அதிகமான தண்ணீரை உறிஞ்சி மழையைக் கொடுக்குது. நன்னீர் இருக்கிற பகுதியிலதான், பல வகையான மீன்கள் உற்பத்தியாகி பெருகி வளருது. ஆக, இனிமேல் கடல்ல வெள்ள நீர் வீணா கலந்துடுச்சுனு சொல்லாதீங்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்