புதிது புதிதாக மணல் குவாரிகள்

விவசாயத்துக்கு மட்டுமல்ல... குடிநீருக்கும் வேட்டு! ஆர்.குமரேசன், எஸ்.நித்யகுமரன்

மிழ்நாட்டில் உள்ள  ஆறுகள் அனைத்தும் அதீத மணல் கொள்ளையால் ஏற்கெனவே சிதைந்து போய் கிடக்கிற சூழ்நிலையில்... கரூர் மாவட்டத்தில், காவிரி ஆற்றில் புதிதாக சில மணல் குவாரிகள் அமைக்க  அனுமதி அளித்துள்ளது, தமிழக அரசு. அதற்கான பணிகள் நடைபெற்றுவரும் நிலையில்... ‘காவிரி ஆற்றைக் கூறு போடவிருக்கும் இந்த குவாரிகளை அமைக்கக்கூடாது’ என எதிர்ப்புத் தெரிவித்துப் போராடி வருகிறார்கள், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும்.

இந்நிலையில், குவாரி அமையவுள்ள பகுதிகளைப் பார்வையிட வந்த தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன், நம்மிடம் பேசினார்.

“கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் புகளூர், நடையனூர், தோட்டக்குறிச்சி, கடமான்குறிச்சி ஆகிய இடங்களில் புதிதாக மணல் குவாரிகளை அமைக்க அனுமதி கொடுத்து... அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே மணல் குவாரிகளால் சிதைந்து கிடக்கிறது, காவிரி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்