இயற்கை விவசாயத்துக்கான வழிகாட்டி ‘பசுமை விகடன்’...

துரை.நாகராஜன், படங்கள்: தே.அசோக்குமார், மா.பி.சித்தார்த்

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த பவுஞ்சூரில்,  ‘பாரம்பர்ய வேளாண்மை விதைகள் உற்பத்திப் பயிற்சி’ அண்மையில் நடைபெற்றது. இப்பயிற்சியில் விழுப்புரம் மாவட்டம், மயிலம் பகுதியைச் சேர்ந்த 40 விவசாயிகள் கலந்துகொண்டனர். ‘பிரதான் மந்திரி விவசாயப் பயிற்சித் திட்ட’த்தின் கீழ் விவசாயிகளுக்கு இப்பயிற்சி வழங்கப்பட்டது. முன்னோடி இயற்கை விவசாயிகள்  கலந்துகொண்டு விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்தனர்.

‘அரியனூர்’ ஜெயச்சந்திரன் பேசும்போது, ‘’விவசாயிக்கு மண்வளம் மிக முக்கியம். இயற்கை விவசாயம் பற்றி பேசுவது எளிது. ஆனால், கடைசிவரை அதைக் கடைபிடிப்பதுதான் மிகவும் முக்கியம். ரசாயன உரங்கள் இட்ட நிலங்களை ‘கொம்பு சாண உரம்’ உபயோகிப்பதன் மூலம் உடனடியாக இயற்கைக்கு மாற்றலாம்” என்றவர் கொம்பு சாண உரம் தயாரிப்பு குறித்து விளக்கமாகச் சொல்லிக் கொடுத்தார்.

அடுத்ததாக  முன்னோடி இயற்கை விவசாயி சுப்பு, பஞ்சகவ்யா, அமுதக்கரைசல், மீன் அமினோ அமிலம், ஜீவாமிர்தம் போன்ற இடுபொருட்கள் தயாரிப்பு முறைகளை விளக்கினார்.

“தொடர்ந்து மூன்று ஆண்டுகள் இயற்கை விவசாயம் செய்து முடித்தவர்கள் ‘முழு இயற்கை விவசாயி’ எனச் சொல்லிக்கொள்ளத் தகுதியுடையவர்கள். தற்போது இயற்கை விவசாயத்துக்கான வழிகாட்டியாக ‘பசுமை விகடன்’ புத்தகம் இருக்கிறது. இப்புத்தகத்தில் வெளிவரும் தகவல்களைப் படித்தாலே இயற்கை விவசாயம் குறித்து முழுமையாக அறிந்துகொள்ள முடியும்” என்றும் விவசாயிகளிடம் சொன்னார் சுப்பு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்