என் பள்ளி... என் தோட்டம்... பள்ளி மாணவர்களின் கீரை விவசாயம்!

இ.கார்த்திகேயன், படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

*தோட்டத்தைப் பார்த்த பிறகே பாடம்

*மாணவர்களே அறுவடை செய்கிறார்கள்

*மாணவர்களின் மதிய உணவில் கீரை

வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் என்பதையெல்லாம் தாண்டி, தற்போது பள்ளிகளில் தோட்டம் அமைப்பதுவரை மாணவர்களிடமும் இயற்கை விவசாயம் குறித்த விழிப்பு உணர்வு பரவ ஆரம்பித்திருக்கிறது. விருதுநகரில் உள்ள ஜெ.சி.ஐ அமைப்பு மூலம் பள்ளி மாணவர்களுக்கு இயற்கை விவசாயப் பயிற்சி அளித்து, பள்ளிகளில் கீரைத் தோட்டம் அமைத்து மாணவர்களே பராமரித்து வருகிறார்கள். 

இதுகுறித்து விருதுநகர் ஜெ.சி.ஐ அமைப்பைச் சேர்ந்த அசோக்குமாரிடம் கேட்ட போது,

‘‘ஜெ.சி.ஐ அமைப்பை தமிழில் ‘இளையோர் அமைப்பு’னு சொல்றோம். இந்த அமைப்பு உலக அளவுல செயல்படுது. சேவை மனப்பான்மையும், சமூகத்தின் மேல அக்கறையும் இருக்கிற,18 முதல் 40 வயசுக்குட்பட்ட யார் வேணும்னாலும் இந்த அமைப்புல உறுப்பினராகலாம்.

தனிமனித மேம்பாடு, மகளிர் முன்னேற்ற, சுயதொழில் கற்றல், சமூக பங்களிப்புனு 13 வகையான திட்டங்களை இந்த அமைப்பு செயல்படுத்திக்கிட்டு இருக்கு. அதுல ஒண்ணுதான் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் நஞ்சில்லா உணவுமுறையும். ரசாயன உரத்தின் தாக்கத்தால் விவசாயமும், விவசாய நிலமும் பாழ்பட்டு போயிடுச்சு. இப்பதான் இயற்கை விவசாயம் பத்தின விழிப்பு உணர்வு மக்கள்கிட்ட பரவ ஆரம்பிச்சிருக்கு. இயற்கை விவசாயத்தை எப்படி மக்கள்கிட்ட கொண்டு போறதுனு ஜெ.சி.ஐ கூட்டத்துல விவாதிச்சப்பதான் பள்ளிக்கூட பசங்ககிட்ட இருந்து தொடங்கலாம்னு முடிவு செஞ்சோம். முதல் கட்டமா, பசங்களுக்கு இயற்கை விவசாயத்தைப் பத்தி எடுத்துச் சொல்லி, பள்ளியிலயே தோட்டம் அமைச்சு, அவங்கள அதுல ஈடுபடுத்தணும்னு முடிவு செஞ்சோம்.

ஜெ.சி.ஐ உறுப்பினர்கள்கிட்ட (மாணவர்கள் தவிர) குறிப்பிட்ட தொகையை நன்கொடையா வாங்கி, தோட்டம் அமைக்க பயன்படுத்ததுற பை, ஸ்பிரேயர், விதைகளை வாங்கினோம். முதல்கட்டமா சத்திர ரெட்டியப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில 40 மாணவர்களுக்கும், நகராட்சி தங்கம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில 100 மாணவிகளுக்கும் இயற்கை விவசாயம், பைகளில் மண்ணு நிரப்பும் முறை, சாணம், தேங்காய் நார்க்கழிவு ஆகியவற்றைப் பயன் படுத்தும் முறை,விதைத்தூவும் முறை என் எல்லாவற்றையும் சொல்லிக்கொடுத்தோம். அவங்க அவங்க விதை தூவுன பைகளை அவங்களே பராமரிக்கணும்னு  சொன்னோம். அவங்களும் ரொம்ப ஆர்வமா அதைச் செய்றாங்க’’ என்று சொன்ன அசோக்குமார் தொடர்ந்தார்,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்