வரலாறு காணாத விலைவீழ்ச்சி...

திணறும் தென்னை விவசாயிகள்!ஜி.பழனிச்சாமி, படங்கள்: தி.விஜய், கே.குணசீலன்

*கொள்முதல் மைய நடைமுறைகளை எளிமைப்படுத்தவேண்டும்

*‘நீரா’ இறக்க அனுமதிக்கவேண்டும்

*ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்யவேண்டும்.

‘அணில் தாண்டா தென்னை ஆயிரம் உள்ளவன், அரசனைப் போல் வாழ்வான்’ இது கிராமங்களில் புழக்கத்தில் உள்ள பழமொழி. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்வரை நிலைமை அப்படித்தான் இருந்தது. ஆனால், இன்று நிலைமையே வேறு. ஆயிரம் அல்ல ஐந்தாயிரம் தென்னை வைத்திருப்பவர்கூட அரசனைப் போல் வாழமுடியாத சூழலில், ஆண்டியாகி நிற்கின்றனர். காரணம், தேங்காய் விலை வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.

விலைவீழ்ச்சிக்கு என்ன காரணம்?

தென்னை விவசாயிகளுக்காக நீண்டகாலமாகப் போராடி வரும் நல்லசாமியிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘‘தென்னை விவசாயம் திண்ணைக்குப் போகும் சூழலில் இருக்கிறது. தொடர் விலைவீழ்ச்சியால் விவசாயிகள் கலங்கிபோய் உள்ளனர். தேங்காய் விலைவீழ்ச்சிக்கு முக்கிய காரணம் பாமாயில் இறக்குமதிதான். பாமாயில் உடன் சேர்த்து, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயும் விநியோகம் செய்யவேண்டும். தேங்காய் விலை வீழ்ச்சியைத் தடுக்கும் வகையில், கடந்த மாதம் தமிழக அரசு ஆதரவு விலை நிர்ணயம் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொப்பரை கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி அரவைக் கொப்பரை கிலோ 59.50 ரூபாய் என்றும் பந்துக்கொப்பரை கிலோ 62.40 ரூபாய் என்ற விலையிலும் விவசாயிகளிடம் இருந்து நேரடி யாக கொள்முதல் செய்வதென முடிவு செய்துள்ளது. இது நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒன்று.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்