மானாவாரி விவசாயிகளை மனம் குளிரவைத்த ‘விதைத் திருவிழா!’

ஆர்.குமரேசன், படங்கள்: உ.பாண்டி

*விளைபொருளை சுத்தப்படுத்தி, தரம் பிரித்து விற்பனை செய்தால் கூடுதல் லாபம்.

*மதிப்புக்கூட்டல் பயிற்சி அளிக்கிறது மதுரை மனையியல் கல்லூரி.

*பயிர் எண்ணிக்கையை முறையாக பராமரிக்க வேண்டும்.

‘விதைகளே பேராயுதம்’ இது, மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அடிக்கடி உணர்வுப்பூர்வமாக உச்சரிக்கும் வார்த்தை. விவசாயத்துக்கு அடிப்படையான விதைகளை, வீடுகளில் சேமித்து வைத்திருந்த காலம் போய், விதைக்கும் நேரத்தில் கம்பெனிக்காரர்களிடம் கையேந்தும் நிலையில் நிற்கிறோம். விதைத்து, அறுவடை செய்தவுடன், விதைநெல் எடுத்துவைத்த பிறகுதான், உணவு மற்ற பயன்பாட்டுக்கு என்ற நிலை இன்றைக்கு இல்லை. காரணம் கம்பெனி விதைகளுக்கு மறுமுளைப்புத் திறன் இல்லாததுதான்.

சர்வதேச அளவில் ஆயிரக்கணக்கான கோடிகளைக் குவிக்கும் வர்த்தகமாக விதைகள் மாறிவிட்ட சூழலில், பாரம்பர்ய விதைகளைக் காக்கவும், அழிந்து வரும் சிறுதானியங்களை மீட்டெடுக்கும் வகையிலும், ஜூலை 17-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் எட்டி வயல் கிராமத்தில் ‘விதைத் திருவிழா’ நடத்தப்பட்டது. ‘பசுமை விகடன்’ மற்றும் ‘டேர் ஃபவுண்டேசன்’ இணைந்து நடத்திய இந்த விழாவில், தமிழகம் முழுவதும் இருந்து 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். குறிப்பாக, எட்டிவயல் கிராமத்தைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்