‘நட்சத்திரத்தைக் காணோம்... நிலாவைக் காணோம்...’

உலகையே மறைக்கும் ஒளிமாசு!அதிர்ச்சி ரிப்போர்ட் விஷ்வா விஸ்வநாத்

‘நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது...

சிறகை விரித்துப் பறப்போம்... நம் உறவில் உலகை அளப்போம்...

விளையாடலாம் நிலாவிலே... நிழல் மூழ்குமோ தண்ணீரிலே

வானைப் புரட்டிப்போடு... புது வாழ்வின் கீதம் பாடு!’


என இனியெல்லாம் பாட முடியாது என்பதுதான் தற்போதைய ‘லேட்டஸ்ட்’ ஆனால் ‘ஹாட்டஸ்ட்’ தகவல்..

பல நூறு ஆண்டுகளுக்கு முன், ‘மில்க்கி வே’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பால்வெளியைப் பார்த்த எகிப்தியர்கள், ‘பசுவின் பால் குளம்’ என்று வர்ணித்தனர். இந்திய  விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், ‘டால்பின்கள் நீந்தும் காட்சி’ என்று வர்ணித்தனர். கலிலியோ, அரிஸ்டாட்டில் என்று வரிசையாக பல ஆராய்ச்சியாளர்கள் தொலைநோக்குக் கருவிகளை வைத்து, விண்வெளியையும், பால்வெளியையும் ஆராய்ந்து ஆராய்ந்து வான சாஸ்திரம், சோதிடம், விண்வெளி ரகசியம் என்று பலவற்றையும் நமக்கு அளித்தனர். அவர்கள் பால்வெளியின் அழகிலும், அறிவிலும் மயங்கியே கிடந்தனர். ஆனால், இப்போது வெளியிடப்பட்ட புதிய ‘அட்லஸ்’ ஒன்று விஞ்ஞானிகளுக்கே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் 99 சதவிகித மக்களால், இரவு நேரத்தில் பால்வெளியை... அவ்வளவு ஏன் அழகான இரவு நேர வானத்தையே பார்க்க முடியாது. காரணம், மின்சார விளக்குகளால் ஒளிரும் ஒளி. அமெரிக்காவில் 80 சதவிகித மக்களாலும், ஐரோப்பாவில் 60 சதவிகித மக்களாலும் வானத்தின் இயற்கை அழகை இரவில் பார்க்கக்கூட முடிவதில்லை. மின்சார விளக்குகளின் ஒளியைத் தாண்டி நமது கண்களால் வான் வெளியை நோக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. மின்விளக்குகளால் ஏற்பட்டுள்ள மாசு, பால்வெளியையும், பூமிப்பந்தையும் கிட்டத்தட்ட துண்டித்தே விட்டது.

இத்தாலியைச் சேர்ந்த  மின்ஒளி மாசு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சியளர் பேபியோ பால்ச்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகின் ஒவ்வொரு பகுதியின்  மின்சார ஒளியின் அளவீட்டு விவரங்கள் தரப்பட்டுள்ளன. இவர் தலைமையிலான ஆய்வுக்குழு, பூமியில் சுமார் 35 ஆயிரம் இடங்களில் இந்த அளவீட்டை மேற்கொண்டுள்ளது. இவர்களின் கணக்கீட்டின்படி ஒளிமாசுவில் சிங்கப்பூர் முதல் இடம் வகிக்கிறது. அதாவது, சிங்கப்பூரில் இரவில் ஒருவர் வான் வெளியைப் பார்க்கவே முடியாது. அந்த அளவுக்கு மின்சார விளக்குகளின் ஒளி, வானத்தையும் பூமியையும் பிரித்துவிடுகிறது. குவைத், கத்தார், ஐக்கிய அரபு நாடுகளின் நிலையும் படுமோசம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்