ஆடிப்பட்ட பயிர்கள்... விலை நிலவரம்! பல்கலைக்கழகத்தின் முன்னறிவிப்பு!

சந்தைக்கேற்ற சாகுபடி! லாப ஊருக்கு ஒரு வழிகாட்டி!துரை.நாகராஜன்

யல் விளைச்சலை அள்ளிக் கொடுத்திருந்தாலும்... சந்தையில் விலை கிடைத்தால்தான், லாபம் கிடைக்கும். ஒவ்வொரு பயிருக்கும் எந்தப் பருவத்தில் நல்ல விலை கிடைக்கும்... சந்தையின் தேவை என்ன? என்பது போன்ற அடிப்படையான சில தகவல்களைத் தெரிந்துகொண்டால், ‘விலை இல்லை’ என்ற கவலையே இருக்காது. ஒவ்வொரு பயிருக்குமான சந்தைத் தகவல்களை அலசுகிறது, இந்தத் தொடர். இந்த இதழில் ஆடிப்பட்டத்துக்கு ஏற்ற பயிர்களுக்கான சந்தை வாய்ப்புகள் இடம்பிடிக்கின்றன...

தமிழ்நாட்டில், ஆடிப்பட்டம் முக்கியமான பட்டமாகும். குறிப்பாக, மானாவாரி சாகுபடிக்கேற்ற பட்டம் இது. இக்கால கட்டத்தில், தென்மேற்குப் பருவமழையைப் பொறுத்தே பயிர் உற்பத்தி அமையும். இப்பருவத்தில், பெரும்பாலும் தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், காய்கறிகள் போன்றவை சாகுபடி செய்யப்படுகின்றன. இக்கால கட்டத்தில் என்ன பயிரை விதைக்கலாம் என்று முடிவு எடுக்கும் வகையில்... தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கும் வேளாண் விற்பனைத் தகவல் மற்றும் வணிக ஊக்குவிப்பு மையத்தின் பின்புல அலுவலகம், இப்பருவத்தில் பயிர் செய்யப்படும் பயிர்களுக்கு அறுவடை சமயத்தில் கிடைக்கவிருக்கும் விலை குறித்த முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்பருவத்தில் விதைக்கும் பயிர்களான மக்காச்சோளம், கேழ்வரகு, பருத்தி, நிலக்கடலை, எள், தக்காளி, கத்திரி மற்றும் வெண்டை ஆகிய பயிர்களுக்கான விலை முன்னறிவிப்பு வருமாறு...

மக்காச்சோளம்... தேவை அதிகம், உற்பத்திக் குறைவு!

தமிழகத்தில் ஆடிப்பட்டத்தில் மானாவாரியில்... பெரம்பலூர், அரியலூர், கடலூர், திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மக்காச்சோளம் பரவலாகப் பயிரிடப்படுகிறது. மக்காச்சோளம் பெரும்பாலும், கால்நடைத்தீவனம் மற்றும் குளுக்கோஸ் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்திய வேளாண் அமைச்சகத்தின் ஆய்வுப்படி,

தட்பவெப்ப சூழ்நிலை காரணமாக மக்காச்சோளம், கடந்த ஆண்டை விட 2.17 சதவிகிதம் சாகுபடிப் பரப்பளவிலும், 13.11 சதவிகிதம் உற்பத்தியிலும் குறைவாக உள்ளது. வெளிமாநில வரத்தும் குறைவாகவே உள்ளதால், ஆடிப்பட்டத்தில் விதைக்கும் மக்காச்சோளம்... அறுவடையின்போது, ஒரு டன் 1,500 ரூபாய் முதல் 1,600 வரை விற்பனையாகலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கேழ்வரகு... கிலோ 20 ரூபாய்!

தென் இந்தியாவில் பயிரிடப்படும் சிறுதானியப் பயிர்களில் கேழ்வரகு முக்கிய உணவுப்பொருள். இதில் அதிக சத்துக்கள் அடங்கியுள்ளதால் அதிக தேவையுள்ள சிறுதானியங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் அதிகமாக கேழ்வரகு சாகுபடி செய்யப்படுகிறது.

தமிழகத்தில், மிகுந்த வெப்பம் காரணமாக கடந்த ஆண்டை விட 0.13 மில்லியன் டன் அளவுக்கு உற்பத்தி குறைந்துள்ளது. உற்பத்தி குறைந்து, தேவை அதிகமாக இருப்பதால், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகச் சந்தைக்கு வரத்து ஆகிக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில்... தற்போது பயிரிடப்படும் கேழ்வரகுக்கு அறுவடையின்போது, ஒரு கிலோவுக்கு 19 ரூபாய் முதல் 20 ரூபாய்வரை விலை கிடைக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பருத்தி... உற்பத்திக் குறைவால் கூடுதல் விலை!

உலக பருத்தி உற்பத்தியில் இந்தியாவின் உற்பத்தி அளவு 27.45 சதவிகிதம். இந்தியாவில் பருத்தி உற்பத்தியில் குஜராத் மாநிலம் முதலிடம் வகிக்கிறது. மகாராஷ்டிரா, ஆந்திரா, ஹரியானா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் அதிகளவு பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்