நீங்கள் கேட்டவை: ‘‘இலவச மின்சாரம் மரப்பயிர்களுக்கு உண்டா?’’

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
புறா பாண்டி, படங்கள்: தி.விஜய், ம.பி.சித்தார்த்

‘‘எங்கள் நெல் வயலில் எலிகளின் தொல்லை அதிகமாக உள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் வழிமுறையைச் சொல்லுங்கள்?’’

எம்.ஆறுமுகம், மயிலாடுதுறை.

திருச்சி மாவட்டம், பூவாளூரைச் சேர்ந்த வேளாண் துறையின் ஓய்வுபெற்ற உதவி வேளாண் அலுவலர் வெ.ரெங்கசாமி, பதில் சொல்கிறார்.

‘‘இருபது எலிகள் ஒன்று சேர்ந்தால்,  ஒரு ஏக்கர் நெல் வயலில் 50% அளவுக்குக்கூட நஷ்டத்தை உண்டுபண்ணிவிடும். பொதுவாக நெல் வயலின் வரப்புகளில்தான் எலிகள் வளை தோண்டி தங்கியிருக்கும். ஆகையால், வரப்புகளின் அகலத்தைக் குறைத்தால், எலிகள் வயலில் தங்க முடியாத நிலை உருவாகும். எனவேதான், வரப்புகளின் உயரம் ஓர் அடியாகவும், அகலம் ஒரு  சாணாகவும் இருக்க வேண்டும் என்று சொல்லி வருகிறோம்.

ஆந்தை மற்றும் கோட்டான் போன்ற பறவைகள் எலிகளைப் பிடிக்க வசதி அளிக்கும் வகையில், வயல்களில் ஒரு ஏக்கருக்கு 10 இடங்களில் மட்டைக் குச்சிகளை ‘T ’ வடிவில் ஊன்றி வைக்க வேண்டும். இந்தக் குச்சிகள் ஆறு அடி உயரம் உள்ளவையாக இருக்க வேண்டும். மேலும், கரும்புத் தோட்டங்களுக்கு அருகில், நெல் சாகுபடி செய்தால், எலிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். இதற்குக் காரணம், கரும்புத் தோட்டத்தில் வளைகள் தோண்டி எலிகள் தங்கிக் கொள்ளும், உணவுக்காக மட்டும் நெல் வயலுக்குள் வந்து சேதம் செய்யும். ஆகையால், கரும்பு வயலுக்கு அருகில் நெல் சாகுபடி செய்தால், எலிகளைக் கட்டுப்படுத்தும் பணிகளை வேகமாகச் செய்யவேண்டும்.

எலிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வரப்பு ஓரங்களில் புதினா நடவு செய்தால், அந்த வாசனைக்கு வயலில் எலிகள் இறங்காது. நொச்சி மற்றும் எருக்கன் இலைச் செடிகளை வயலைச் சுற்றி வேலிப்பயிராக நட்டால், எலித் தொல்லை இருக்காது. மற்றபடி ரசாயன விஷத்தை வைத்து, எலிகளைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தால், எலிகளை விட, பயிருக்கு நன்மை செய்யும் பல உயிர்கள்தான் அதிகம் பலியாகும்.’’

தொடர்புக்கு, செல்போன்: 95786-69455

‘‘மரப்பயிர்கள் சாகுபடி செய்துள்ளோம். இதற்கு இலவச மின்சாரத்தைப் பயன்படுத்தக் கூடாது என மின்வாரிய அதிகாரிகள் சொல்கிறார்கள். இது சரியா..?’’

ஆர்.தேவி, நார்த்தாமலை.

கோயம்புத்தூர் வேளாண் காடுகள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் நாராயணசாமி, பதில் சொல்கிறார்.

‘‘மரப்பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் அவ்வப்போது சந்திக்கும் முக்கியமான பிரச்னை இது. இலவச மின்சாரம் அறிவித்தது முதல் நெல், கரும்பு, வாழை மாதிரியான வேளாண்மைப் பயிர்களுக்கு மட்டும்தான் இலவச மின்சாரம். மரப்பயிர்களுக்குக் கிடையாது என்று தமிழக மின்வாரியம் தொடர்ந்து கெடுபிடி காட்டிவந்தது. எங்கள் சங்கத்தின் மூலம் 2013-ம் ஆண்டு அப்போதைய வனத்துறையின் செயலர் இறையன்பு அவர்களின், கவனத்துக்கு இந்த விஷயத்தை எடுத்துச் சென்றோம். உடனே துறை ரீதியாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்குக் கடிதம் எழுதினார். அதன் தொடர்ச்சியாக ‘வேளாண்மை மற்றும் இதரப் பயிர்களுக்கும் இலவச மின்சாரத்தைப் பயன்படுத்தலாம் என்று சட்டத்தில் இருக்கிறது. இதரப்பயிர்கள் என்கிற அடிப்படையில், 10 ஹெச்.பிக்கு குறைவாக இருக்கும் மின் இணைப்புகள் மூலம் மர சாகுபடி செய்யும் விவசாயிகள், இலவச மின்சாரத்தைப் பயன்படுத்தி பாசனம் செய்துகொள்ளலாம்’ என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இயக்குநர் தெளிவுபடுத்திவிட்டார். இதன் அடிப்படையில், புதிய மின் இணைப்பு வாங்கும்போது, மரம் வளர்ப்புக்கு என்று குறிப்பிட்டுக் கேட்டே இலவச மின்சார இணைப்பை வாங்க முடியும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்