நெல், வாழை, தென்னை, கால்நடை... தபோவனத்தில் தழைக்கும் விவசாயம்!

கு.ராமகிருஷ்ணன், படங்கள்: தே.தீட்ஷித்

ரந்து விரிந்த வயலில் நெற்பயிர்கள், அணி வகுத்து நிற்கும் ஆயிரக்கணக்கான வாழைக்கன்றுகள், தென்னை மரங்கள், அறுபதுக்கும் மேற்பட்ட பால்மாடுகள்... இவையெல்லாம் இருக்கும் பண்ணை, ஓர் ஆசிரமத்தில் இருந்தால் ஆச்சர்யம்தானே! ஆம், ஆன்மிகம் மற்றும் கல்விப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் ராமகிருஷ்ண தபோவனம், விவசாயத்திலும் முழுக்கவனத்தை செலுத்தி வருகிறது. திருச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலையில் 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முக்கொம்புக்கு அருகே உள்ளது, திருப்பராய்த்துறை கிராமம். இங்குதான் எழில் கொஞ்சும் சூழ்நிலையில் அமைந்துள்ளது, தபோவனம். 

ஓர் அதிகாலை வேளையில் ஆசிரமத்துக்குச் சென்றோம். நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதும் உற்சாகத்தோடு வரவேற்றுப் பேசினார், ஆசிரமத் தோட்டத்தின் பொறுப்பாளர் ருத்ரானந்த சுவாமிகள்.

உணவு உற்பத்தி உன்னதமான பணி!

“ஆசிரமத்தின் மொத்த பரப்பு 40 ஏக்கர். ஸ்ரீவிவேகானந்தா வித்யாவனம் உயர்நிலைப்பள்ளி, விடுதி, அலுவலகம், வீடுகள் எல்லாம் இதுலதான் இருக்கு. விவசாயம்ங்கிறது மனிதவாழ்க்கையில முதன்மையான அங்கம். உயிர்களை வாழ வைக்கிறதுக்கு உணவு அவசியம். அந்த உணவை உற்பத்தி செய்றதுங்கிறது உயர்வான, உன்னதமான பணி. இதுல எங்களுக்கு லாபநோக்கம் கிடையாது. விவசாயத்தை நோக்கி மக்களை அழைச்சிக்கிட்டுப் போகவும், இங்க வரக்கூடிய ஆயிரக்கணக்கான பக்தர்களை ஊக்கப்படுத்தவும், அவங்களுக்கு எல்லாம் உந்துசக்தியாக இருக்கணுங்கிற நோக்கத்துலதான் 1948-ம் வருஷத்துல இருந்து இங்க விவசாயம் நடந்துகிட்டு இருக்கு.

ஆசிரமத் தேவைக்கு ஆரோக்கிய உணவு!

இதனால், கூடுதல் பலனாக எங்க பள்ளிக்கூடத்துல படிக்கிற விடுதி மாணவர்கள் 560 பேருக்கு ஆரோக்கியமான உணவைக் கொடுக்க முடியுது. இந்தப் பகுதிகள்ல உள்ள 30 விவசாயத் தொழிலாளர்களுக்கு வருஷம் முழுக்க வேலை கொடுக்க முடியுது. ஆறேழு விவசாயத் தொழிலாளர் குடும்பங்கள் தபோவனத்துல உள்ள வீடுகள்ல நிரந்தரமா வசிக்கிறாங்க.

தபோவனத்துல ராமகிருஷ்ணர் ஜெயந்தி விழா, சாரதா தேவி ஜெயந்தி விழா, நவராத்திரி விழானு ஆண்டு முழுவதும் நிறைய விசேஷங்கள் நடக்கும். பல்வேறு பகுதிகள்ல இருந்து பத்தாயிரத்தும் மேற்பட்ட பக்தர்கள் இங்க வருவாங்க. அவங்களுக்கும் ஆரோக்கியமான உணவு கொடுக்க முடியுது. அதனாலதான் இங்க நாங்க விவசாயத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்குறோம்” என்று அறிமுகம் கொடுத்த ருத்ரானந்த சுவாமிகள், பண்ணையைச் சுற்றிக் காட்டிக்கொண்டே பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்