உயிர்களோடு உறவாடும் புளூ கிராஸ்!

துரை.நாகராஜன், படங்கள்: மீ.நிவேதன்

விலங்குகளுக்கு நடக்கும் கொடுமைகள், அநீதிகளுக்கு எதிர்ப்புக் குரல் கொடுப்பதோடு, பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு சிகிச்சை அளித்து பாதுகாத்து வரும் விலங்குகள் நல அமைப்பு, ‘புளூ கிராஸ்’. சென்னை, வேளச்சேரி செக்போஸ்ட் அருகே செயல்பட்டு வரும் இவ்வமைப்பை, 1959-ம் ஆண்டு ‘கேப்டன்’ சுந்தரம் என்பவர் ஆரம்பித்தார். 1964-ம் ஆண்டு முழுமையான பொது நல அமைப்புக்கான அங்கீகாரத்தைப் பெற்ற புளுகிராஸ் அமைப்பு, அப்போதிருந்தே விலங்குகள் நலனுக்காக செயல்பட்டு வருகிறது.

இவ்வமைப்பின் செயல்பாடுகள் குறித்து, புளூ கிராஸின் முதன்மை செயல் அதிகாரி சங்கர்ராஜனிடம் பேசினோம். “தற்போது, 53-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது, புளூ கிராஸ். விலங்குகளை துன்புறுத்துவது, அடிபட்ட வீட்டுப் பிராணிகளை சாலைகளில் விட்டு விடுவது போன்ற இரக்கமற்ற செயல்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். மக்கள் ்தொகை அதிகரிப்பதைப்போல வீட்டு விலங்குகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பது வழக்கம்தான். அதற்காக அவற்றை கொலை செய்வது, விரட்டி விடுவது போன்ற செயல்கள் கண்டனத்துக்குரியவை” என்ற சங்கர்ராஜன் அங்குள்ள விலங்குகள் உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்று காட்டிக்கொண்டே பேச ஆரம்பித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்