ஏமாற்றும் கர்நாடகா... மெத்தனத்தில் தமிழ்நாடு! - ‘சம்பா’வும் அம்போவா?

கு.ராமகிருஷ்ணன்பிரச்னை

மிழ்நாட்டுக்குத் தர வேண்டிய காவிரி தண்ணீரை இந்த ஆண்டும் கொடுக்காமல் கர்நாடக மாநிலம் ஏமாற்றி விட்டது. இதனால், வழக்கம் போல டெல்டா பகுதியின் குறுவை போக நெல் சாகுபடிக்கு ஜூன் 12-ம் தேதியன்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியாத அவலநிலை உருவானது. இந்நிலையில், ‘சம்பா சாகுபடியும் பொய்த்துப் போகும் சூழ்நிலையில் உள்ளனர், டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள். இன்னமும் அது குறித்த தெளிவான பதில் இல்லாததால், சம்பா சாகுபடிக்கான விதைப்பைத் துவக்க முடியாமல் நெருக்கடி நிலையில் இருக்கிறார்கள், விவசாயிகள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ‘தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க‘த்தின் துணைச் செலயாளர் சுகுமாறன், ‘‘காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பில், ‘கர்நாடகா, 205 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்துக்குத் தர வேண்டும்’ எனச் சொல்லப்பட்டது. ஆனால், கர்நாடகா அதை மதிக்கவேயில்லை. இறுதித் தீர்ப்பில், ‘192 டி.எம்.சி தண்ணீர் தர வேண்டும்’ எனச் சொல்லப்பட்டது. அது அரசிதழிலும் வெளியிடப்பட்டது. அப்போது, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு விழா நடத்தி, ‘பொன்னியின் செல்வி’, ‘காவிரித்தாய்’ எனப் பட்டங்கள் சூட்டி அ.தி.மு.க-வினர் மகிழ்ந்தார்கள். ஆனால், இறுதித் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளபடி, தமிழகத்துக்கு தண்ணீர் இதுவரை வந்து சேரவே இல்லை. கர்நாடகா தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. தமிழக அரசோ தொடர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்