தமிழ்நாட்டில் தேவை அதிகம்... உற்பத்தி குறைவு!

சந்தைக்கேற்ற சாகுபடி! லாப ஊருக்கு ஒரு வழிகாட்டி!துரை.நாகராஜன், படங்கள்: தே.சிலம்பரசன்

*ஆண்டு முழுவதும் விற்பனை

*சேமித்து வைக்க ஏதுவானது

*அதிக சத்துக்கள் உள்ளன

*மானாவாரிப் பயிர்

யல் விளைச்சலை அள்ளிக் கொடுத்திருந்தாலும்... சந்தையில் விலைகிடைத்தால்தான், லாபம் கிடைக்கும். ஒவ்வொரு பயிருக்கும் எந்தப் பருவத்தில் நல்ல விலை கிடைக்கும்... சந்தையின் தேவை என்ன? என்பது போன்ற அடிப்படையான சில தகவல்களைத் தெரிந்துகொண்டால், ‘விலை இல்லை’ என்ற கவலையே இருக்காது. ஒவ்வொரு பயிருக்குமான சந்தைத் தகவல்களை அலசுகிறது, இத்தொடர். இந்த இதழில், கேழ்வரகு குறித்த தகவல்கள் இடம்பிடிக்கின்றன.

‘ராகி’ என்று பொதுவாக அழைக்கப்படும் கேழ்வரகு, தென் இந்தியாவில் முக்கிய உணவாகப் பயன்படுகிறது. கேழ்வரகில்... கூழ், புட்டு, கேக் போன்ற உணவுகள் அதிக அளவில் தயார் செய்யப்படுகின்றன. ஆண்டுக்கு ஒரு முறை விளையும் தானியமான கேழ்வரகு, வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்ப மண்டலப் பகுதிகளில் விளையும். இதை, தமிழகத்தில் ஆரியம், கேப்பை என்றும் சொல்வர். கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் கேழ்வரகு சாகுபடியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 67 சதவிகிதம் கர்நாடக மாநிலத்தில்தான் விளைகிறது. அடுத்தபடியாக 17 சதவிகிதம் தமிழ்நாட்டில் விளைகிறது. தவிர, ஆந்திரா, உத்தரப்பிரதேசம், பீஹார் ஆகிய மாநிலங்களிலும் சாகுபடி செய்யப்படுகிறது.  

இப்பயிரில், இரண்டு இனங்கள் உள்ளன.  ஒன்று காட்டு வகை (எல்லூசின் இண்டிகா). மற்றொன்று பயிர் செய்யக்கூடிய வகை (எல்லூசின் கோரகானா). கேழ்வரகு சிறுதானியப்பயிர்களில் முக்கியமான பயிர். சேமித்து வைக்க ஏதுவானது. ஊட்டச்சத்து மிக்கது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் இயங்கி வரும், உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு மையம் நமக்கு கொடுத்த தகவலின்படி, தமிழ்நாட்டில் உள்ள சந்தைகளில் திண்டிவனம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் முக்கியமானதாக உள்ளது. கேழ்வரகு சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, இலங்கை, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு ஆண்டு முழுவதும் ஏற்றுமதியாகிறது. இந்திய தேசிய வேளாண்மை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, 2014-15-ம் ஆண்டில்... தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் பயிரிடப்பட்டு 3 லட்சம் டன் அளவு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு மற்றும் வேலூர் மாவட்டங்களில் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. அதிக வெப்பம் காரணமாக நடப்பாண்டில் உற்பத்தி குறைந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்