வெகுமதி கொடுக்கும் வெள்ளைப் பொன்னி...

7 ஏக்கர்... 5 மாதங்கள்... ரூ 3,28,000 லாபம்!இ.கார்த்திகேயன், படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

*150 நாள் வயது

*எல்லா மண்ணுக்கும் ஏற்றது

*ஆடிப்பட்டம், மாசிப்பட்டம் சிறந்தது

*ஏக்கருக்கு 30 கிலோ விதை

*அரிசியாக விற்றால் கூடுதல் லாபம்

ஞ்சில்லா உணவு உற்பத்தி என்பதோடு எளிமையான பராமரிப்பு மற்றும் குறைவான செலவில் நிறைவான லாபம் என்பதுதான் இயற்கை விவசாயத்தை நோக்கி பலரையும் திருப்பி வருகிறது.

இதில் வீரிய ரக பயிர்களையும் சிறப்பாக சாகுபடி செய்யமுடியும் என்றாலும், பெரும்பாலான இயற்கை விவசாயிகள் பாரம்பர்ய ரகங்களைத்தான் சாகுபடி செய்கிறார்கள். அதிலும் சில குறிப்பிட்ட பாரம்பர்ய நெல் ரகங்களுக்கு சிறப்பான சந்தை வாய்ப்பு இருப்பதால், பலரும் அவற்றைத் தொடர்ந்து சாகுபடி செய்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கருணாகரன். 

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலூகா, கூமாப்பட்டியில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சா.கொடிக்குளம் கிராமத்தில்தான் கருணாகரனின் நெல் வயல் உள்ளது. காலைவேளையில், வயலில் வேலை செய்துகொண்டிருந்த கருணாகரனைச் சந்தித்தோம்.

இயற்கைக்கு மாறினேன்!

“தாத்தா, அப்பா காலத்துல இருந்தே விவசாயம்தான் செய்றோம். அவங்க நெல், கரும்பு, தென்னைனு ரசாயன முறையில செஞ்சுட்டு இருந்தாங்க. நானும் பி.ஏ முடிச்சுட்டு விவசாயத்துக்கு வந்துட்டேன். ஆரம்பத்துல ரசாயன விவசாயம்தான் செய்தேன். ‘உழவு செய்யறப்பவே உரத்தைக் கொட்டிடணும். பூச்சியைப் பார்த்தா பூச்சிக்கொல்லி அடிக்கணும்’ இதுதான் நான் விவசாயத்துக்கு வரும்போது, எனக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்ட பாடம். அப்போ, இயற்கை விவசாயம் பத்தியெல்லாம் எதுவுமே தெரியாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்