நீங்கள் கேட்டவை: தேனீக்கள் யானைகளை விரட்டுமா?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
புறா பாண்டி10-ம் ஆண்டு சிறப்பிதழ்

‘‘ஊறுகாய்ப்புல் தயாரிப்பது எப்படி? எத்தனை மாதங்களுக்கு இதைப் பயன்படுத்தலாம்?’’

ஏ.சரவணன், திருச்சி.


திருச்சி வேளாண்மைக் கல்லூரி முன்னாள் முதல்வர் ராஜாகண்ணு பதில் சொல்கிறார்.

‘‘ஊறுகாய்ப்புல் வறட்சியான நேரத்தில் கைகொடுக்கக் கூடியது. கோ-3 அல்லது கோ-4 புல்லை நடவு செய்த 40-ம் நாள் அறுவடை செய்து, அதே வயலில் இரண்டு மணி நேரம் போட்டு வைக்கவேண்டும். பிறகு சிறுசிறு கட்டுகளாகக் கட்டவேண்டும், தரையில் ஆழமாக குழிதோண்டி, அதன் உள்ளே பிளாஸ்டிக் ஷீட்டை விரித்து, அதன் மீது புல் கட்டுகளை சீராக அடுக்கவேண்டும். காலால் நன்கு மிதித்து, காற்று இல்லாதவாறு வெளியேற்ற வேண்டும். பிறகு, ஒரு டன் புல்லுக்கு 4 கிலோ என்ற விகிதத்தில் கல் உப்பைத் தெளிக்க வேண்டும். 10 லிட்டர் தண்ணீரில் இரண்டு கிலோ வெல்லத்தைக் கரைத்துத் தெளிக்க வேண்டும். உள்ளே அடுக்கப்படும் புல் கட்டுகளின் எடைக்கு ஏற்ப கல் உப்பு, வெல்லக் கரைசல் ஆகியவற்றின் அளவுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். முதல் அடுக்கு முடிந்ததும், மீண்டும் அதன் மீது புல் கட்டுகளை அடுக்கி, காலால் மிதித்து, காற்றை வெளியேற்றி, கல் உப்பு, வெல்லக் கரைசலைத் தெளிக்க வேண்டும். இதேபோல் குழி நிரம்பும் அளவுக்கு அடுத்தடுத்த அடுக்குகளை அமைக்கலாம். பிறகு, அதன் மீது பிளாஸ்டிக் ஷீட்டை விரித்து, அதன் மீது குவியலாக மண்ணைக் குவிக்க வேண்டும் (டூம் வடிவில்). அப்போதுதான் மழை நீர் உள்ளே இறங்காது. காற்றும், தண்ணீரும் உள்ளே செல்லக்கூடாது. குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் வரை மூடியிருக்க வேண்டும். அதன் பிறகு, மண்ணை அப்புறப்படுத்தி, பிளாஸ்டிக் ஷீட்டை நீக்கி, தேவையான அளவு தினந்தோறும் இந்த ஊறுகாய்ப் புல்லை கால்நடைகளுக்குக் கொடுக்கலாம். தினமும் புல் எடுத்தவுடன், மீதமுள்ளவற்றை பிளாஸ்டிக் ஷீட்டால் மூடி விட வேண்டும். அதன் மீது மண் போடத் தேவையில்லை. மழைக் காலத்தில் கோ-3, கோ-4 நடவுக்கு 20 நாள் முன்பாக தனியாக 15 சென்ட் நிலத்தில் தீவனச் சோளத்தை விதைக்கவேண்டும். (அப்போதுதான் ஒரே சமயத்தில் அறுவடை செய்து, ஊறுகாய்ப்புல் தயாரிப்புக்குப் பயன்படுத்த முடியும்). முக்கால் டன் தொழுவுரம் போட்டு, எட்டு கிலோ விதையைத் தூவினால் போதும். 60-ம் நாள் அறுவடை செய்துவிடலாம். இதை ஒருமுறை மட்டும் சாகுபடி செய்தாலே போதும். இதேபோல கோ-3 அல்லது கோ-4 புல்லை முதல் தடவை, வெறும் 5 சென்ட் பரப்பில் மட்டும் முழுமையாக அறுவடை செய்து, இரண்டையும் சேர்த்து பதப்படுத்தி வைத்துக்கொண்டால்... வறட்சி நிலவும்போது ஒரு மாடு மற்றும் ஐந்து ஆடுகளின் தீவனத்தேவையைச் சமாளிக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்