‘‘தண்ணீர், அரசாங்கத்தின் சொத்து அல்ல!’’

சாட்டை எடுக்கும் ‘தண்ணீர் மனிதர்’நிலம்...நீர்...நீதி!10-ம் ஆண்டு சிறப்பிதழ்க.சரவணன், துரை நாகராஜன், படங்கள்: தி.ஹரிஹரன்

றண்ட பாலைவன பூமியான ராஜஸ்தான் மாநிலத்தின் ஒரு பகுதியில், வற்றிக்கிடந்த ஆறுகளை உயிர்ப்பித்து, விவசாயத்தைச் செழிக்கச் செய்துகொண்டிருப்பவர்... ‘தண்ணீர் மனிதர்’ என்று அழைக்கப்படும் ராஜேந்திர சிங்.

விகடன் உருவாக்கியிருக்கும் நிலம்...நீர்...நீதி இயக்கத்தின் ஆலோசனைக்குழுவில் இடம்பெற்றிருக்கும் இவர், சமீபத்தில் சென்னை வந்திருந்தபோது, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடும்பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளையும், ஏரிகள், தாங்கல்கள், கால்வாய்கள், ஆறுகள் என்று நீர்நிலைகளையும் நம்மோடு இணைந்து ஆய்வு செய்தார். அதன் முடிவில் அவரிடம் சில கேள்விகளை முன் வைத்தபோது...

‘‘சென்னை போன்ற பெருநகரங்கள் மற்றும் அவற்றின் புறநகர்ப் பகுதிகளில் விவசாயம் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. இத்தகையச் சூழலில், நீர்நிலைகளைக் காப்பாற்றவும், நீர்ச் சேகரிப்பை முன்னெடுக்கவும் நகர்ப்புற மக்கள் எப்படி முன்வருவார்கள்?’’

‘‘தண்ணீர்தான் உயிர்! தண்ணீர் இருந்தால்தான்... மனிதனின் வாழ்வாதாரம், கண்ணியம் எல்லாம் காக்கப்படும். தண்ணீர் இருந்தால்தான் பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க முடியும். ஏற்கெனவே, சென்னைக்கான மொத்த குடிநீரும் வெளியிலிருந்துதான் வருகிறது. இதில் அவ்வப்போது பிரச்னைகள் ஏற்பட்டாலும், சமாளித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால், எவ்வளவு காலத்துக்கு வெளியூர்களிலிருந்து சென்னைக்குத் தண்ணீர் கொடுப்பார்கள்? ஒரு கட்டத்தில் பிற மாநிலங்களைப் போல, பிற மாவட்ட மக்களும் போர்க்குரல் கொடுக்க ஆரம்பித்தால் என்னவாகும்? இந்த உண்மையை உரிய வகையில் உணர வைத்தால், தங்களின் சொந்த குடிநீர்த் தேவைக்காவது, மாநகர மக்கள் நீர்ச் சேகரிப்புப் பணிகளில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தை உணர்வார்கள்!’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்