கரும்புக்குக் கூடுதல் விலை... அரசின் கண்துடைப்பு வேலை!

கண்ணீர் விடும் கரும்பு விவசாயிகள்...காசி.வேம்பையன்10-ம் ஆண்டு சிறப்பிதழ்

டந்த இரண்டு ஆண்டுகளில் அரவை செய்த கரும்புக்கு, தனியார் சர்க்கரை ஆலைகள் பல நூறு கோடி ரூபாய் விவசாயிகளுக்கு பாக்கி வைத்திருக்கும் நிலையில்... 2015-2016-ம் ஆண்டு கரும்பு அரவைப் பருவத்துக்கு ஒரு டன் கரும்புக்கு 2 ஆயிரத்து 850 ரூபாய் (வாகன வாடகை உட்பட) என மத்திய, மாநில அரசுகள் அறிவித்திருப்பதில், விவசாயிகள் கொந்தளித்துக் கிடக்கிறார்கள்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ரவீந்திரன், “நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள கரும்பு விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் கரும்பு விலை மூலமாகப் பரிகாரம் செய்யும் என எதிர்பார்த்த எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும், ‘விவசாயச் செலவினங்கள் மற்றும் விலை நிர்ணய ஆணையம்’, கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் கரும்பு உற்பத்தி செய்வதற்கு சராசரியாக 224 ரூபாய் செலவு எனக் கணக்கிட்டுள்ளது. இதன் அடிப்படையில் பார்த்தால் ஒரு டன் கரும்பு உற்பத்திக்கான செலவு, 2 ஆயிரத்து 240 ரூபாய். ஆனால், உற்பத்திக்கான செலவைவிட குறைவான தொகையை... அதாவது ஒரு டன் கரும்புக்கு 2 ஆயிரத்து 200 ரூபாய் மற்றும் வாகன வாடகையாக 100 ரூபாய் என அறிவித்தது, மத்திய அரசு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்