மரத்தடி மாநாடு: இயற்கை விவசாயிகளைத் தேடும் அரசியல்வாதிகள்!

ஓவியம்: ஹரன்10-ம் ஆண்டு சிறப்பிதழ்

நாற்றங்காலில் விதைப்பதற்காக விதைநெல்லை அளந்து கொண்டிருந்தார், ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். அவருக்கு ஒத்தாசை செய்துகொண்டிருந்தார், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. சற்றுநேரத்தில், தோட் டத்துக்கு வந்த ‘காய்கறி’ கண்ணம்மாவும் அவர்களோடு சேர்ந்து கொண்டார். விதைநெல்லை அளந்து சாக்கில் கட்டி வைத்துவிட்டு, அன்றைய மாநாட்டை ஆரம்பித்தனர்.

‘‘ஒரு முக்கியமான விஷயம்யா...’’ என்று ஆரம்பித்த வாத்தியார், ‘‘பெரு நகரம், சிறு நகரம்னு எல்லா பகுதிகளிலும் இயற்கைக் காய்கறிகள், விளைபொருட்கள் குறித்த விழிப்பு உணர்வு அதிகமாகிக்கிட்டே இருக்கு. அதனால, இயற்கை விவசாயிகளும் இப்போ, அதிகரிச்சிக்கிட்டே இருக்காங்க. தமிழ்நாட்டுல சட்டமன்றத் தேர்தல் வரப்போற நேரங்கிறதால... இயற்கை விவசாயத்துக்கு இருக்கிற மதிப்பை ‘ஓட்டா’ அறுவடை பண்றதுக்காக இங்க இருக்கிற முக்கிய அரசியல் கட்சிகள் திட்டம் போட்டுட்டு இருக்காங்க. இயற்கை விவசாயிகளையும், இயற்கை விளைபொருட்கள் நுகர்வோரையும் கவர்ற மாதிரி தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சங்களைப் போட்டி போட்டுக்கிட்டு அறிவிக்கப் போறாங்க போல. அதுக்காக, ஒவ்வொரு கட்சியும் அவங்களோட தொடர்புல இருக்கிற இயற்கை விவசாயிகள், ஆர்வலர்கள்கிட்ட அது தொடர்பான விஷயங்களைச் சேகரிச்சிக்கிட்டு இருக்கிறாங்க’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்