பி.டி பருத்தி... கர்நாடக விவசாயிகளின் கண்ணீர் கதை கேள்விக்குறியாகிப் போன விவசாயம்...

தூரன் நம்பி10-ம் ஆண்டு சிறப்பிதழ்

ர்நாடக மாநிலம், ராய்ச்சூரு (ரெய்ச்சூர்) மாவட்டம், கடகம்தொட்டி கிராமத்தில் பி.டி பருத்தியை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு காய்ப்புழுவால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு குறித்து கடந்த இதழில் பார்த்தோம். அப்பகுதியில் ஏராளமான பருத்தி விவசாயிகளின் வாழ்வைச் சூனியமாக்கியுள்ளது, காய்ப்புழு.

கடகம்தொட்டி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் கவுடாவின் வயலில் ‘பச்சைப் பசேல்’ என்று ஆள் உயரத்துக்கு வளர்ந்து நிற்கிறது, பி.டி பருத்தி. பூ, காய்களுக்குக் குறைவே இல்லை. பூத்துக் காய்த்து குலுங்குகின்றன. ஆனால், பருத்தி வெடிக்கவே இல்லை. 

“பொதுவாக பருத்தி, 60 முதல் 70 நாட்களில் பூ எடுக்கும். 80 நாட்களிலிருந்து வெடிக்கும். நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது 150 நாட்கள் வயதுள்ள செடிகள். இன்னும் ஒரு கிலோ பருத்தி கூட அறுவடையாகவில்லை. ஒன்றரை ஏக்கர் பருத்திக்கு இதுவரை ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்து விட்டோம். பருத்தி வெடிக்குமா இல்லை வாழ்வைப் பறிக்குமா? எனத் தெரியவில்லை” கண்களில் நீர்வழிய தன் சோகங்களைக் கொட்டினார், ஸ்ரீகாந்த் கவுடா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்