இயற்கை உளுந்து... இனிக்கும் லாபம்!

ஒரு ஏக்கர்... 75 நாள்... ரூ 48 ஆயிரம்....இ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன்10-ம் ஆண்டு சிறப்பிதழ்படிச்சோம்... விதைச்சோம்...

சாயன உரத்தைக் கொட்டி மண்ணையும், விளைபொருட்களையும் நஞ்சாக்கி வந்த பல விவசாயிகளை... இயற்கை வேளாண்மை வல்லுநர்களைக் கொண்டு  இயற்கைப் பாதைக்கு மாற்றும் பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறது, ‘பசுமை விகடன்’. அப்படிப் பெரும்பாலானோர்  இயற்கை விவசாயத்துக்கு மாறி வருகிறார்கள். அவர்களை அவ்வப்போது அடையாளம் காட்டும் பணியையும் பசுமை விகடன் மேற்கொண்டு வருகிறது. அத்தகையோரில் ஒருவர்தான், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் ஷேக் முகமது.

தாழையூத்து கிராமத்தில் லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் செய்துகொண்டிருந்த அப்துல் ஷேக் முகமது, பசுமை விகடன் மீது ஏற்பட்ட ஈர்ப்பால்... தொழிலை தம்பியிடம் ஒப்படைத்துவிட்டு, இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்து விட்டார்.

திருநெல்வேலி மாவட்டம், நாஞ்சான்குளத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தென்கலம் கிராமத்தில் உள்ளது, அப்துல் ஷேக் முகமதுவின் தோட்டம். அங்கே, பணியில் ஈடுபட்டிருந்த அப்துல் ஷேக் முகமதுவைச் சந்தித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்