நீங்கள் கேட்டவை: ‘‘சைக்கிள் மூலம் இயங்கும் சிறுதானிய இயந்திரம்?’’

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
புறா பாண்டி, படம்: வீ.சிவக்குமார்

‘‘மரச்செக்கு மூலம் எண்ணெய் எடுக்கும் தொழிலைத் தொடங்க விரும்புகிறோம். லாபகரமாக நடத்தும் வழிமுறையைச் சொல்லுங்கள். இதற்கு வங்கிக்கடன் கிடைக்குமா?’’

சு.சா.அன்புமதி, மதுரை.

மரச்செக்கு மூலம் எண்ணெய் எடுத்து வரும் திருப்பூர் மாவட்டம், நத்தக்காடையூரைச் சேர்ந்த சதீஷ் பதில் சொல்கிறார்.

‘‘பசுமை விகடன்’ இதழ் தொடங்கியது முதற்கொண்டே... மரச்செக்கு எண்ணெயின் மகிமையைப் பற்றிய செய்திகள் மற்றும் தகவல்களை, அவ்வப்போது வெளியிட்டு வாசகர்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறது. இப்போது, ‘சோசியல் மீடியா’ என்று சொல்லப்படும், ‘ஃபேஸ்புக்,’ ‘வாட்ஸ் அப்’... போன்ற வற்றிலும் மரச்செக்கு எண்ணெய், சிறுதானிய உணவுகள் குறித்த விழிப்பு உணர்வுச் செய்திகள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன. இதனால், மரச்செக்கு எண்ணெய் விற்பனையும் விறு விறுப்படைந்துள்ளது.

முன்பெல்லாம் மரத்தின் மூலம் செய்யப்பட்ட செக்கில், மாடுகள் மூலம்தான் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்... போன்றவற்றை ஆட்டி வந்தார்கள். காலப்போக்கில், கால்நடைகள் குறைந்து போனதாலும், மரச்செக்கின் மகத்துவம் தெரியாமல் போனதாலும், இந்தத் தொழிலின் வளர்ச்சி குறைந்துபோனது. மரச்செக்குகளின் இடத்தை இயந்திரங்கள் (ரோட்டரி) பிடித்துவிட்டன. ஆனால், மீண்டும் மரக்செக்குகள் வளரத் தொடங்கிவிட்டன. ஆனால், மாடுகளைப் பயன்படுத்தாமல், சிறிய அளவிலான மின்சார இயந்திரத்தைக் கீழே பொருத்தி, வாகை மரத்தில் செய்யப்பட்ட செக்கைக் கொண்டு எண்ணெய் எடுக்கப்படுகின்றது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்