பத்மஸ்ரீ விருது... ஜீரோ பட்ஜெட்டுக்கு மரியாதை..!

பசுமைக் குழு

சுமைப் புரட்சிக்கு பிறகு மண்வளம் கெட்டு, உணவுப் பொருள்கள் நஞ்சாகிக் கிடக்கும் சமயத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்ய ஜீரோ பட்ஜெட் என்னும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியவர் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஜீரோ பட்ஜெட் பிதாமகர், சுபாஷ் பாலேக்கர். இவருக்கு இந்த ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், விதர்பா பகுதியைச் சேர்ந்த பெலோரா என்ற கிராமத்தில் 1949-ம் ஆண்டில் பிறந்தவர் சுபாஷ் பாலேக்கர். அடிப்படையில் இவர் ஒரு வேளாண் பட்டதாரி. ரசாயன விவசாயத்தில் நடந்துவரும் கெடுதல்கள், இவர் மனதை உறுத்தியது. அதன் காரணமாக ஏற்பட்ட தேடுதல்தான் விவசாயிகளிடம் பிரபலமாக இருந்து வரும் ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்ப முறை. பல்கலைக்கழகத்தில் படித்ததை விட, காடுகளில் வசிக்கும் பழங்குடி மக்களிடமிருந்து தான் இயற்கையைக் குறித்து கற்றுக் கொண்டதாக சுபாஷ் பாலேக்கர் அடிக்கடி சொல்வதுண்டு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்