பாறையில் உருவான பசுமை... சோலையாக மாறிய கொழுஞ்சி!

கு.ராமகிருஷ்ணன், படங்கள்: ம.அரவிந்த்

ரடு முரடான பாறைகள்... கடுமையான வெப்பம்... இறுகிப்போன நிலம்... இப்படித்தான் ஒரு காலத்தில் இருந்தது, தற்போதைய கொழுஞ்சி உயிர்ச்சூழல் பண்ணை. உயிர்ச்சத்துக்களே இல்லாததால், தாவரங்கள் உயிர்ப்பிக்க மறுத்த மலட்டு நிலத்தில்... தானாக வந்து நேசத்தோடும் நம்பிக்கையோடும் களம் இறங்கினார், நம்மாழ்வார். அறிவு வளத்தாலும், அயராத உழைப்பாலும் படிப்படியாக பசுமையை அங்கு வளர்த்தெடுத்தார். அந்த அர்ப்பணிப்பு உழைப்பால்தான் இன்று, சோலைவனமாக செழித்தோங்கியிருக்கிறது, கொழுஞ்சிப் பண்ணை. நீடித்த, நிலைத்த வேளாண்மையை சிறு, குறு விவசாயிகளிடத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு நம்மாழ்வார் உள்ளிட்ட சிலரால் உருவாக்கப்பட்ட ‘குடும்பம்’ தொண்டு நிறுவனத்துக்குச் சொந்தமானது, இப்பண்ணை.

பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள், ஏராளமான மூலிகைகள், சிறுதானியங்கள், காய்கறிகள், கீரைகள், பாரம்பர்ய நெல் ரகங்கள், ஆடு, மாடு, கோழி, பறவைகள் என பல்லுயிர்ச் சூழலோடு உயிர்த்தெழுந்திருக்கும் இப்பண்ணை, புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒடுகம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் இருந்து 22 கிலோ மீட்டர் தூரம், பயணித்தும் இந்தப் பண்ணைக்குச் செல்ல முடியும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்