‘‘அவர் உலகுக்குச் செய்தார்... நாங்க ஊருக்குச் செய்றோம்...’’

நெகிழ வைக்கும் நற்பணி மன்றம்! இ.கார்த்திகேயன், படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

டிகர்கள், அரசியல்தலைவர்கள், சாதித் தலைவர்கள் ஆகியோருக்குத்தான் பெரும்பாலும் நற்பணி மன்றம் வைத்துக் கொண்டாடுவார்கள். இத்தகையோருக்கு மத்தியில், இயற்கையை நேசிக்கும் விருதுநகர் மாவட்டம், முத்துராமலிங்கபுர விவசாயிகள், நம்மாழ்வார் பெயரில் நற்பணி மன்றம் வைத்திருக்கிறார்கள் என்றால், ஆச்சர்யப்படத்தானே வேண்டும்!

மரத்தில் அமர்ந்து பழங்களைத் தின்னும் பறவை, அதற்கு நன்றிக்கடனாக எங்கோ எச்சமிட்டு விதை தூவி, மற்றொரு தாவரத்தை இந்த பூமிக்குக் கொடுக்கிறது. இப்படி ஒவ்வொரு சின்னஞ்சிறு பறவையும், பிரதிபலன் எதிர்பார்க்காமல் கணக்கிலடங்காத அளவுக்கு விதைகளை விதைத்து மரங்களை உருவாக்குகின்றன. அதேபோல எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் எடுத்துக்கொண்ட காரியத்தை செவ்வனே ஆற்றியவர், இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார். அவர் விதைத்த விதைகளில் பல விருட்சமாகி இருக்கின்றன. அதில் எண்ணற்ற பறவைகள் இளைப்பாறி விழிப்பு உணர்வு பெற்றுச் செல்கின்றன. நம்மாழ்வாரின் கருத்துக் கனிகளை உண்டு, அவற்றைப் பல இடங்களிலும் விதைப்பவர்கள் தமிழநாட்டில் பெருகிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களில் இந்த முத்துராமலிங்கபுர விவசாயிகளுக்கு முக்கிய இடமுண்டு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்