நம்மாழ்வாருக்காக ஒரு பூங்கா...

நெகிழ வைக்கும் மன்னை!கு.ராமகிருஷ்ணன், படங்கள்: கே.குணசீலன்

ம்மாழ்வார், தனது இறுதிக் காலத்தில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில்தான் அதிகம் சுற்றிச் சுழன்றார். மன்னார்குடியை மையமாகக் கொண்டு மீத்தேன் எடுக்கும் திட்டம் உருவாக்கப்பட்டதால், இதற்கு எதிராக சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இங்குள்ள மக்களிடம் விழிப்பு உணர்வை உருவாக்கினார். அம்மக்களிடம் இணக்கமாகப் பழகி, இயற்கை விவசாயம், வாழ்வியல் முறை உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களையும் ஆழமாக விதைத்தார். இதனால், இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் பலர் நம்மாழ்வாரின் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளனர்.

அப்படி, அவர் மீது தீவிர பற்றுக்கொண்ட இளைஞர்கள் ஒன்றுகூடி... ‘மன்னையின் மைந்தர்கள்’ என்ற அமைப்பை உருவாக்கி, நம்மாழ்வாரின் எண்ணங்களை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இயங்கி வருகிறார்கள். ‘நம்மாழ்வாரை நிரந்தரமாக நினைவுபடுத்த வேண்டும்’ என்ற நோக்கத்தோடு... மன்னார்குடி ரயில் நிலையத்தில் நம்மாழ்வார் நினைவுப் பூங்காவை அமைத்திருக்கிறார்கள். டிசம்பர் 5-ம் தேதி, இந்தப் பூங்காவை அர்ப்பணிக்கும் நிகழ்வு, நடைபெற்றது. நம்மாழ்வாரின் திருவுருவ ஓவியத்துடன், அவர் உதிர்த்த பொன்மொழியான ‘முயற்சி என்பது விதை போல. அதை விதைத்துக்கொண்டே இரு... முளைத்தால் மரம். இல்லையேல், அதுவே மண்ணுக்கு உரம்’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இந்த நினைவுப் பூங்காவில், நம்மாழ்வார் மிகவும் நேசித்த மருத்துவ மகத்துவம் நிறைந்த பிரண்டை, வெற்றிலை, கருந்துளசி, கரிசலாங்கண்ணி, கற்றாழை உள்ளிட்ட மூலிகைச் செடிகளை நடவு செய்திருக்கிறார்கள். வேம்பு, அரசு, புங்கன் மரங்களும் பூங்காவை அலங்கரிக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்