‘நம்மாழ்வார், இயற்கை அங்காடிகளின் பிதாமகன்!’

த.ஜெயகுமார், படங்கள்: பா.அருண்

‘இயற்கை விவசாயம் வளர வேண்டும் என்றால், இயற்கை விளைபொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட வேண்டும். நுகர்வோர் மத்தியில் இயற்கை உணவு குறித்து விழிப்பு உணர்வு பெருக வேண்டும்’ என்று சொல்லி அந்தப் பணியிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர், இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார். ஆரம்ப காலங்களில் இருந்தே நம்மாழ்வாருடன் நெருங்கிப் பழகி வந்த சிலர், இயற்கை அங்காடிகளைத் தொடங்க முன்வந்தனர். அவர்களில் ஒருவர்தான் ‘சண்டே மார்க்கெட்’ முரளி. சென்னை, மயிலாப்பூரில் உள்ள முன்னோடி  இயற்கை அங்காடி உரிமையாளரான முரளி, தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

“எனக்கு 1999-ம் ஆண்டுலதான் ஈரோடுல நடந்த இயற்கை விவசாயிகள் கூட்டத்துல, அய்யா நம்மாழ்வாரைச் சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சது. அப்போ, இயற்கை விவசாயம், இயற்கை விவசாய விளைபொருட்களை மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்க்க வேண்டிய நோக்கத்தைத் தெளிவுப்படுத்தினாரு. இதே காலகட்டதுலதான் நானும், ‘டி.இ.டி.இ டிரஸ்ட்’ ரங்கநாதனும் சேர்ந்து மயிலாப்பூர்ல இயற்கை அங்காடியை ஆரம்பிச்சிருந்தோம். அப்ப ஐந்து வாடிக்கையாளர்கள்தான் இருந்தாங்க. ஒரு நாளைக்கு 100 ரூபாய் விற்பனையானாலே மகிழ்ச்சியாக இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்