நல்விதையாய் விழுந்த நம்மாழ்வார்...

புகழாரம் சூட்டும் துணைவேந்தர்!காசி.வேம்பையன், படம்: தி.விஜய்

சாயன உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் மட்டுமே தூக்கிப் பிடித்துப் பேசி வரும் வேளாண் விஞ்ஞானிகள் மத்தியில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மைக்கு எனத் தனியாக ஒரு துறையை உருவாக்கியதுடன்... இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரை பல்கலைக்கழகத்துக்கு முதன்முதலில் அழைத்து வந்து பேச வைத்தவர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கு.ராமசாமி.

நம்மாழ்வார் சிறப்பிதழுக்காக அவரிடம் பேசினோம். “பள்ளி ஆண்டு விழாக்களில் நடைபெறும் மாறு வேடப் போட்டிகளில் காந்தி, நேரு... என்றுதான் குழந்தைகளுக்கு வேஷம் போடுவர். இப்போது நிறைய ஊர்களில்... ‘தலையில் பச்சை வண்ண முண்டாசு, உடலை போர்த்திய துண்டு, வேட்டியுடன் நம்மாழ்வார் வேடம் போட்டு ‘மாடு கன்று போடும், சாணி போடும். ஆனா டிராக்டர் சாணி போடுமாய்யா’னு குழந்தைகள் மழலை மொழியில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்தளவுக்கு விவசாயக் குடும்பக் குழந்தைகள் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார் நம்மாழ்வார். பல்கலைக்கழக விஞ்ஞானிகளும், அரசும் ஒருங்கிணைந்த பண்ணையம், ஒருங்கிணைந்த பூச்சி, நோய்க் கட்டுப்பாடு, சிக்கன நீர்ப்பாசனம் என்று பல்வேறு ஊடகங்கள் மூலமாக பரப்புரை செய்த போதெல்லாம் ஏற்றுக்கொள்ளாத விவசாயிகள்... அவர்களில் ஒருவராக அவர்கள் மொழியிலேயே பேசி வந்த நம்மாழ்வாரின் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்