‘‘இயற்கை வேளாண்மைக்குத்தான், இனி எதிர்காலம்!’’

ஜெ.விக்னேஷ்

சென்னை லயோலா கல்லூரியின், பூச்சியியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் ‘அருட்தந்தை’ ச.இன்னாசிமுத்து மற்றும் முனைவர். வீ.அன்பழகன் ஆகியோர் எழுதிய ‘இயற்கை வேளாண்மை’ என்ற நூல் வெளியீடு மற்றும் திறனாய்வு விழா, அண்மையில் அந்தக் கல்லூரியில் நடைபெற்றது. முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார், லயோலா கல்லூரி, ‘லைஃப் கல்வி நிறுவன’த்தின் இயக்குநர் எஸ்.வின்சென்ட்.

விழாவில் பேசிய இன்னாசிமுத்து, “எங்கள் பூச்சியியல் ஆய்வு நிறுவனம் எப்போதும் விவசாயிகளுக்கு உதவிகரமாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில், அனைத்து ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறோம். அதன் வெளிப்பாடுதான், பல ஆண்டுகள் ஆய்வுக்குப் பிறகு உருவாக்கிய ‘பொன்னீம்’ என்ற மூலிகைப் பூச்சிவிரட்டி. இதன் தயாரிப்பு முறையை, ‘பசுமை விகடன்’ வாயிலாக மக்களுக்குக் கற்றுக் கொடுத்தோம். செலவு குறைந்த இயற்கை வேளாண்மைதான், எதிர்காலத்தில் வெற்றி நடைபோடவுள்ளது. இயற்கை வேளாண்மை நுட்பங்கள் பற்றி மக்களுக்கு இன்னும் அதிகமாக கற்பிக்க வேண்டும். அதற்கு இந்த நூல் ஒரு வாய்ப்பாக அமையும் என நம்புகிறேன்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்