மரத்தடி மாநாடு: ‘மதுரையிலும் கொப்பரைச் சந்தை வேண்டும்!’

ஓவியம்: ஹரன்

ழையில் நனைந்திருந்த வைக்கோலை, காலையிலேயே தோட்டத்தில் பரப்பி காயவைத்துக் கொண்டிருந்தார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். அவருக்கு உதவி செய்யும்விதமாக கால்களால் வைக்கோலைப் பரப்பி விட்டுக் கொண்டிருந்தார், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. சற்றுநேரத்தில் அங்கு வந்த ‘காய்கறி’ கண்ணம்மா, திட்டில் கூடையை இறக்கி வைத்து அமர்ந்தார். வேலைகளை முடித்துவிட்டு ஏரோட்டியும் வாத்தியாரும் வந்தமர... ஒரு செய்தியுடன் அன்றைய மாநாட்டைத் துவக்கினார் வாத்தியார்.

“செம்பரம்பாக்கம் ஏரியைத் திடீர்னு திறந்துவிட்டதாலதான் சென்னை நகர்ல வெள்ளம் வந்துச்சுனு எல்லாரும் சொல்றாங்க. ‘அதெல்லாம் கிடையாது. வழக்கமா பெய்ற மழையை விட அதிகமா பெய்ததாலதான் சென்னை நகரம் மூழ்கிப்போச்சு. செம்பரம்பாக்கம் ஏரிக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை’னு இன்னொரு தரப்பு சொல்லிக்கிட்டு இருக்கு. ஆனா, இப்போ இருக்கிற அரசும் சரி, இதுக்கு முந்தைய அரசும் சரி... நீர்நிலைகளை அழிச்சதுதான் காரணம்கிறது யாருமே மறுக்க முடியாத உண்மை. ஆனா, ஒருத்தரை ஒருத்தர் பழி சொல்லிக்கிட்டு ஊரை ஏமாத்திக்கிட்டு இருக்கிறாங்க. இதுக்கு இடையில நீர்நிலைகளை ஆக்கிரமிச்சு இருக்கிற கட்டடங்களை அகற்றணும்னு நீதிமன்றம் சொல்லவும், பொதுப்பணித்துறை அதிகாரிகள், ரகசிய கணக்கெடுப்பை ஆரம்பிச்சிருக்காங்க. அதனால, இப்போதான் ஒவ்வொரு விஷயமா வெளிய வந்துட்டு இருக்கு. செம்பரம்பாக்கம் ஏரிக்குப் பக்கத்துல ‘ஆட்டோ நகர்’ அமைக்கிறதுக்காக... பொய்யான தகவல்கள் சொல்லி, 29 ஆயிரம் சதுர அடி அளவுக்கு வாய்க்கால் புறம்போக்கு நிலத்தை ஒன்றரைக் கோடி ரூபாய்னு விலை நிர்ணயம் செய்து தனியாருக்கு கொடுக்க ஏற்பாடு செய்திருக்காங்க. வாய்க்கால் புறம்போக்கைப் பயன்பாட்டு மாற்றம் செய்றதுக்காக, 2010-ம் வருஷம் ஜனவரி 27-ம் தேதி அன்னிக்கு... வருவாய்த்துறை அரசாணை வெளியிட்டிருக்கு. அரசாங்கமே இப்படி ஆக்கிரமிக்கிறப்போ மத்தவங்களை என்ன சொல்றது’’ என்று வேதனைக் குரலில் சொல்லி வாத்தியார் நிறுத்த...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்