பாரீஸ் பருவநிலை மாநாடு... வெற்றி என்பது வெறும் கூச்சலே!

க.சரவணன்

‘‘வெற்றி... வெற்றி... பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த, உலக நாடுகள் எடுத்த முயற்சிக்கு வெற்றி’’ என்கிற சத்தம் கேட்கிறது... கடந்த நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 12-ம் தேதி வரை ஃபிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற உலக நாடுகள் பங்கேற்ற காப்-21 (COP-Conference of the Parties) கருத்தரங்கின் முடிவில்!

ஆனால், “இது வெறும் வாய்ச் சவடால் மட்டுமே! இதன் மூலமாக நாம் சாதிக்கப் போவது மிகக்குறைவு” என்று கவலை பொங்க எதிர்க்குரல் கொடுக்கிறார்கள்... உலகளாவிய சூழலியல் செயற்பாட்டாளர்கள். ‘‘பருவநிலை மாற்றம், கடற்கரையோர ஏழை நாடுகளைக் கடுமையாக பாதிக்கும். ஆனால், இந்த நாடுகள் அடையும் பாதிப்புகள், அதுகுறித்த விரிவான செயல்திட்டம் பற்றி இங்கே விவாதிக்கப்படவே இல்லை’’ என்பதும் சமூக ஆர்வலர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்