கார்ப்பரேட் கோடரி - 11

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
மண் மீதான வன்முறையைத் தோலுரிக்கும் தொடர்!‘சூழலியலாளர்’ நக்கீரன், ஓவியம்: ஹரன்

‘கடல் சுனாமி’ பற்றி எல்லோருக்கும் தெரியும். ‘பட்டினி சுனாமி’ தெரியுமா... கடந்த 2008-ம் ஆண்டில் உலகத்தை இந்த பட்டினி சுனாமி தாக்கியது. அந்தாண்டில் உணவுப் பொருட்களின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கடுமையாக உயர்ந்தது. கிட்டத்தட்ட 140 சதவிகிதம் வரை உயர்ந்தது. உணவு விலைப்பட்டியல் உருவாக்கப்பட்ட 1845-ம் ஆண்டு முதல் இப்படியொரு விலையேற்றத்தை உலகம் சந்தித்ததில்லை.

‘இப்பட்டினி சுனாமியால் ஒரே ஆண்டில் பத்து கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே தள்ளப்பட்டனர். 100 கோடி மக்கள் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டனர்’ என உலக வங்கி அறிக்கை வெளியிட்டது. இதன் தொடர் விளைவாக பல்வேறு நாடுகளில் உணவுக் கலவரங்கள், சூறையாடல்கள் நடைபெறும் அளவுக்கு நிலைமை மோசமாகியது.

ஆனால், அவ்வாண்டில் உணவு உற்பத்தி குறையவில்லை. மக்கள் தொகைப் பெருக்கமும் இதற்குக் காரணமில்லை.

1950-ம் ஆண்டு உலக உணவு உற்பத்தி, 60 கோடி டன் அளவில் இருந்தபோது, அன்றைய மக்கள் தொகை 200 கோடி. 2007-ம் ஆண்டு உணவு உற்பத்தி 207 கோடி டன் என அதிகரித்திருக்க... மக்கள் தொகை 1950-ம் ஆண்டில் இருந்ததை விட 2.6 மடங்கு பெருகியிருந்தது. அதேசமயம் உணவு உற்பத்தியின் பெருக்கம் 3.3 மடங்கு. இந்தக் கணக்கின்படி உலக மக்கள் அனைவருக்கும் சராசரியாக 314 கிலோ உணவு கிடைத்திருக்க வேண்டும். அது எங்கே போனது? 

உணவுக்கு உலை வைத்த உயிரி எரிபொருள்!

பசிக்கான தானியங்கள், எரிபொருளாக மாறியதுதான் இந்த விலையேற்றத்துக்கு அடிப்படைக் காரணம். ஆனால், இதை மூடி மறைத்தது, ஐக்கிய அமெரிக்கா. அன்றைய அமெரிக்க அதிபர் புஷ், ‘இந்தியாவிலும் சீனாவிலும் கோதுமை சாப்பிடுபவர்கள் அதிகமாகி விட்டதுதான் காரணம்’ என்றார். அதாவது நாம் அதிகமாக சப்பாத்தி சாப்பிடத் தொடங்கியதுதான், விலையேற்றத்துக்குக் காரணமாம். இச்சமயத்தில்தான் உலக வங்கியின் வெளியிடப்படாத ரகசிய அறிக்கை ஒன்றை லண்டனில் உள்ள ‘கார்டியன்’ பத்திரிக்கை வெளியிட்டு உண்மைகளை அம்பலப்படுத்தியது. ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் இவற்றின் உயிரி எரிபொருள் கொள்கையே இவ்விலையேற்றத்துக்குக் காரணம் என்பதை விளக்கியது, அந்த அறிக்கை. அதற்கு முன்னர் ஐக்கிய அமெரிக்க வேளாண்துறை, ‘உயிரி எரிபொருள் உற்பத்தியால் மூன்று சதவிகிதம் மட்டுமே விலை உயர்ந்தது’ எனச் சாதித்திருந்தது. உலக வங்கியின் அறிக்கை வெளியிடப்பட்டால், அமெரிக்க அதிபருக்கு சிக்கல் ஏற்படும் என்பதால் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது, அவ்வறிக்கை. இது, உலக வங்கியில் ஐக்கிய அமெரிக்காவின்  செல்வாக்குக்கு ஒரு சான்று.

உணவு தானியத்தை ‘எத்தனால்’ என்னும் உயிரி எரிபொருளாக மாற்றும் நடவடிக்கைகளை ஐக்கிய அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் முன்னெடுக்கத் தொடங்கியிருந்தன.

2007-ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கா தனது நாடாளுமன்றத்தில், ‘எதிர்காலத்தில் 20 சதவிகிதம் எரிபொருளை தாவரங்களிலிருந்து தயாரிக்க வேண்டும்’ என்று சட்டமே இயற்றியது. இதன்படி 2008-ம் ஆண்டு மொத்த சோள விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கு அளவு, எரிபொருள் உற்பத்திக்காக ஒதுக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் சமையல் எண்ணெய் உற்பத்தியில் சரிபாதியை எரிபொருள் உற்பத்திக்காகப் பயன்படுத்துகின்றன. ஆனால், இதற்கெல்லாம் பலியாவது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வயிறுதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்