பொங்கல் சீர்வரிசை... பனியன் நகரத்தில் பித்தளைப் பானை...!

பொங்கல் சிறப்பிதழ்ஜி.பழனிச்சாமி, படங்கள்: ரமேஷ் கந்தசாமி, க.சத்தியமூர்த்தி

விடிகாலை நேரத்தில் கருங்கல் அடுப்புக் கூட்டி பொங்கல் வைத்து பொங்கும்போது... ‘பொங்கலோ பொங்கல்’ என உரக்கச் சொல்லி குலவையிட்டு விவசாயத்துக்கு உறுதுணை வகிக்கும் சூரியனை வணங்குவது தமிழர்களின் மரபு. மார்கழி மாத மையத்திலேயே... மண் பானை, வெண்கலப் பானை, செம்புப் பானை, பித்தளைப் பானை என விதவிதமான பொங்கல் பானைகள் விற்பனை சூடுபிடிக்க ஆரம்பித்து விடும். இதில், பித்தளைப்பானைக்கும் அகப்பைக்கும் எப்போதும் தனியிடம் உண்டு. காரணம்... திருமணம் செய்து கொடுத்த பெண்களுக்கு ‘தலைப்பொங்கல்’ அன்று கொடுக்கும் பொங்கல் சீரில் பித்தளைப் பானையும் அகப்பையும் கட்டாயம் இடம்பெற்றிருக்கும். சமையல் குறிப்புப் புத்தகத்தைப் படித்து விட்டு, எலெக்ட்ரிக் குக்கரிலும், மைக்ரோவேவ் அவனிலும் பொங்கல் வைத்துக் கொண்டிருந்தாலும்... பித்தளைப் பானைகளுக்கு இன்றும் கிராக்கி குறையவில்லை. அத்தகைய பித்தளைப் பானைகளை பல இடங்களில் தயாரித்தாலும், திருப்பூர் நகரத்திலுள்ள அனுப்பர்பாளையத்தில் தயாரிக்கப்படும் பித்தளைப் பானைகளுக்கு தனி மதிப்பு இருக்கிறது.

பொங்கல் சிறப்பிதழுக்காக அனுப்பர்பாளையம் தெருக்களில்  ஒரு வலம் வந்தோம். பித்தளைத் தகடுகளை அறுக்கும் வேலை ஒருபுறம்... அடுப்பில் காய்ச்சி அதை பானை வடிவம் செய்யும் சம்மட்டியால் அடிக்கும் வேலைகள் ஒரு புறம்... உள் ஈயம் பூசி அடுக்கி வைத்த பானைகள், தொடர்ந்து மெருகேற்றிய பளீர் புதுப்பானைகளை மூட்டை பிடிப்பது ஒருபுறம்... என பட்டறைகளில் தொழிலாளர்கள் வேலையில் முனைப்பாக இருந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்