செலவில்லாமல் பார்த்தீனியத்தை அழிக்கலாம்...

வழிகாட்டும் வேளாண் அறிவியல் மையம்!துரை.நாகராஜன், படங்கள்: வீ.சிவக்குமார்பொங்கல் சிறப்பிதழ்

விவசாயத்தில் பெரிய பிரச்னையாக இருப்பது களைகள். அதிலும் விவசாயிகளை அதிக கஷ்டத்தில் ஆழ்த்துவது பார்த்தீனியம். அழிக்க அழிக்க மீண்டும் வளரும் அரக்கனான பார்த்தீனியத்தை அழிக்க... களைக்கொல்லி, உப்புக்கரைசல் எனப் பலவிதமான யுக்திகளைக் கையாண்டும் பலன் கிடைப்பதில்லை. இந்நிலையில், பார்த்தீனியத்தை பைசா செலவில்லாமல் அழிக்க, ஒரு வகையான வண்டுகளை அறிமுகம் செய்துள்ளது, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் இயங்கும் வேளாண் அறிவியல் மையம்.

இந்த வண்டுகள் மூலம் தனது நிலத்தில் இருந்த பார்த்தீனியக் களைகளை முழுமையாக அழித்துள்ளார், திண்டுக்கல் மாவட்டம், பண்ணைப்பட்டி அருகேயுள்ள சந்தமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த இளம் விவசாயி சதீஷ்குமார். அவரிடம் பேசினோம்.

“எனக்கு மொத்தம் 16 ஏக்கர் நிலமிருக்கு. நிலத்துல எப்பவும் சோளம், கரும்பு, முருங்கை, துவரை, வெங்காயம்...னு சாகுபடி செய்வோம். அப்பா பேச்சிமுத்துவும், அம்மா சம்பூர்ணமும் விவசாயத்தைப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. நான் விவசாயம் செய்ய ரொம்ப ஆர்வமா இருந்த சமயத்துல, எங்க அப்பா ‘நீயும் என்ன மாதிரி கஷ்டப்படக்கூடாது’னு சொல்லி மறுத்திட்டாரு. நான் பெங்களூருல பைனான்ஸ்ல வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். ஒவ்வொரு முறை ஊருக்கு வரும்போதும் எனக்கும் விவசாய ஆசை வரும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்