மண்புழு மன்னாரு: மாட்டு வாகடமும், சரஸ்வதி மஹாலும்..!

மாத்தி யோசி, ஓவியம்: ஹரன்

‘‘கேளப்பா நோய்களது வருகும்வாறும்…
காணவே நோய்களது வருவதேது...’’
னு வயதான பெரியவங்க பாடறதைக் கேட்டிருக்கலாம்.

காகிதமும் இல்லாத, அச்சு இயந்திரமும் இல்லாத, அந்தக் காலத்துல எல்லாருக்கும் ஓலைச்சுவடியில எழுதிப் படிக்கிறதும், சுவடியைப் பாதுக்காக்கிறதும் சிரமமாக இருந்திருக்கு. அதனால, முக்கிய தகவலை எல்லாம், செய்யுள், வெண்பா வடிவத்துல பாடி வெச்சாங்க. காரணம், செய்யுளையும், வெண்பாவையும் சுலபமா மனப்பாடம் செய்து வைச்சுக்க முடியும். எந்த நேரத்துல கேட்டாலும், கடகடனு வெண்பாவைப் பாட முடியும். இதனாலதான், பழைய காலத்து நூல்கள் பலதும் பாட்டு வடிவத்துலயே இருக்கு. கல் வெட்டு, செப்புப் பட்டயம் எழுதும்போதுகூட பாடல் வடிவத்துலயேதான் எழுதி வெச்சாங்க. இதனாலதான் தமிழ் மருத்துவமான சித்த மருத்துவ முறையும், கால்நடைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட மாட்டு வாகட (வாகடம்னா மருத்துவம்னு அர்த்தம்) மருத்துவத்தையும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளைத் தாண்டியும், நாம பயன்படுத்த முடியுது.

சித்த மருத்துவமும், மாட்டு வாகடமும் பரவலா புழக்கத்துல இருக்கு. ஆனா, இன்னும் வெளியில வாரத நுட்பங்கள் ஏராளம் இருக்கு. நம்ம நாட்டுல வாழ்ந்த சித்தர் பெருமக்கள், மனுஷன், கால்நடை, தாவரங்கள்னு தனித்தனியே மருத்துவ முறையைச் சொல்லி வெச்சிருக்காங்க. அதுல சித்தர் வரிசையில முன்னோடியான அகத்தியர், பறவைகளுக்கும், மரம், செடி, கொடி... மாதிரியான பயிர் வகைகளுக்கும் கூட மருத்துவ முறையைச் சொல்லி வெச்சிருக்காரு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்