மழைப் பேரழிவு... தீர்வு சொல்லும் மக்கள் தளம்...!

துரை.நாகராஜன், எஸ்.கே.பிரேம்குமார், படங்கள்: தி.ஹரிஹரன், ஜெ.விக்னேஷ்

ழை, மக்களுக்கு சேதத்தை விளைவித்திருந்தாலும்... இன்னொருப் பக்கம் நீர்நிலைகளின் மீது நடத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை வெளிக்கொணர்ந்துள்ளது. அரசு, மக்கள் என அனைவரும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும், என்பதை முகத்தில் அடித்து உணர்த்தியுள்ளது.

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், மழைவெள்ள காலத்தில் உதவிய தன்னார்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள், குடியிருப்புவாசிகள் உள்ளிட்டோரை ஒருங்கிணைத்து ‘மக்கள் தளம்’ என்ற பொது மேடையை ஏற்பாடு செய்திருந்தார், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசிய பொதுச் செயலாளர் டாக்டர் வி.சுரேஷ். இந்த விவாத நிகழ்ச்சி சென்னை, ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லூரியில், டிசம்பர் 27-ம் தேதி நடைபெற்றது. சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர்  நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்