மரத்தடி மாநாடு: ‘விவசாயிகளுக்கு நேரடி மானியம்..!’

ஓவியம்: ஹரன்பொங்கல் சிறப்பிதழ்

காலையிலேயே ‘ஏரோட்டி’ ஏகாம்பரத்தின் தோட்டம் களை கட்டியிருந்தது. தனியார் தொலைக்காட்சியின் பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சிக்காக... ஏரோட்டியின் தோட்டத்தில் ‘பொங்கல் விழா’ கொண்டாட்ட படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. பட்டுப்புடவை சரசரக்க, ‘காய்கறி’ கண்ணம்மா பொங்கல் வைத்துக் கொண்டிருந்தார். பட்டுச் சட்டை, வேட்டியில் வந்திருந்த ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி, படப்பிடிப்புக் குழுவினருடன் உரையாடிக் கொண்டிருந்தார். சற்று நேரத்தில் பெண்களின் குலவைச் சத்தம் கேட்க, அனைவரும் பொங்கல் பானை முன் கூடி, ‘பொங்கலோ பொங்கல்’ என்று உரக்கச் சொல்லி சூரிய வழிபாடு செய்தனர். ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்து தொலைக்காட்சிக் குழுவினர் கிளம்பிய பிறகு, மூவரும் அமர்ந்து ஆசுவாசமாக பொங்கலை ருசிக்க... அங்கேயே தொடங்கியது, அன்றைய மாநாடு.

மாடுகளுக்கு பொங்கலை ஊட்டி, மேய்ச்சலுக்கு அனுப்பி விட்டு வந்த ஏரோட்டி, ‘‘இந்த வருஷமாவது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைக்குமா?’’ என்று கேட்டார்.

‘‘அதுல சட்டுபுட்டுனு ஒரு முடிவு சொல்லாம இழுத்துக்கிட்டே இருக்குது, மத்திய அரசு. தமிழ்நாட்டுல நம்ம ஆளுங்க இதை வெச்சு நல்லா அரசியல் பண்ணிக்கிட்டு இருக்கிறாங்க. இதுக்கு இடையில ‘நம்ம நாட்டு மாடுகளை ஒழிக்கணுங்கிறதுக்காக மான்சான்டோ கம்பெனி செய்ற சதி வேலைதான், ஜல்லிக்கட்டுக்கான அனுமதி மறுப்பு’னு முகநூல், வாட்ஸ்அப்ல எல்லாம் வேற செய்தி பரவிக்கிட்டிருக்கு. மத்திய அரசாங்கம் அனுமதி கொடுக்கிற மாதிரி சொல்லிட்டு திடீர்னு பல்டி அடிச்சிருக்கிறதைப் பார்த்தா, உண்மையிலேயே இதுக்குப் பின்னாடி ஏதாவது சதி இருக்குமோனு சந்தேகம் வருது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்