உரல்... உலக்கை... அம்மி... ஆட்டுக்கல்...

ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் ஆதி கருவிகள்!ஆர்.குமரேசன், படங்கள்: வீ.சக்தி அருணகிரிபொங்கல் சிறப்பிதழ்

சேவல் கூவிட, விடிந்தும் விடியாத காலைப்பொழுதில் ஆடு, மாடுகளின் கழுத்து மணியோசை... ‘டங்..டங்..டங்’ என உரலில் தானியங்களை இடிக்கும் ஓசை... இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இவையெல்லாம்தான் கிராமத்து மக்களுக்கு அதிகாலை சங்கீதம். சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் துயில் நீங்குவதற்கான ‘அலாரம்’. இதை உணர்ந்தவர்களுக்கு இன்னமும் இந்த ஓசைகள் காதுகளில் ரீங்காரமிடும்.

அன்றன்றைக்கு உணவுக்கு வேண்டிய கம்பு, சோளம் போன்ற சிறுதானியங்களை அன்றன்றைக்கே உரலில் இட்டு, இடித்துத்தான் தயார் செய்வார்கள். தீபாவளி, பொங்கல், கோயில் திருவிழா போன்ற பண்டிகை நாட்களில் மட்டுமே அந்த உரல்கள் நெல்மணிகளைப் பார்க்கும். மற்ற நாட்களில் சிறுதானிய உணவுகள்தான். நாவில் ஊறும் அந்த சிறுதானிய உணவுகள் எங்குமே உண்ணக் கிடைக்காது. கைக்குத்தல் அரிசியை மண்பானையில் பொங்கி வடித்து உண்ணும் உணவுதான் உண்மையில் தேவாமிர்தம். அப்படி சுவையான உணவைக் கொடுத்த, உரல், உலக்கை, அம்மி, ஆட்டுக்கல் போன்றவற்றை புழக்கடைக்கும் பரணுக்கும் அனுப்பிவிட்டது, நவீன கிரைண்டரும், மிக்சியும். என்னதான் ‘கால சுனாமி’ சுழற்றி எறிந்தாலும், பாரம்பர்யத்தைக் கைவிடாத பல கிராமங்களில் இன்றைக்கும் புழங்கிக் கொண்டிருக்கின்றன, ஆதிகாலத்து கருவிகள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்