பணம் காய்க்கும் பனை... 100 மரங்கள்... ஆண்டுக்கு ரூ 8 லட்சம்!

பண்ணைத்தொழில்இ.கார்த்திகேயன், படங்கள்: ஏ.சிதம்பரம்பொங்கல் சிறப்பிதழ்

நாகரிக மயக்கத்தில் நுகர்வுக் கலாசாரம் மாறிப்போனதால் வழக்கொழிந்து வரும் இயற்கைப் பொருட்களில் ஒன்று, பனங்கருப்பட்டி. தற்போது, சர்க்கரைக்கு மாற்றாக இதன் தேவை அதிகரித்து வந்தாலும், உற்பத்தி மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது. தென் மாவட்டங்களில் ஒரு காலத்தில் கூட்டம் கூட்டமாக இருந்த ஆயிரக்கணக்கான பனை மரங்கள், செங்கல் சூளைகளில் எரிந்து சாம்பலாகி விட்டன. அதனால், பனை மரங்களின் எண்ணிக்கை குறைந்துபோனதால்... பதநீர் இறக்குதல்; கற்கண்டு, கருப்பட்டித் தயாரித்தல்; பனையோலைப் பொருட்கள் தயாரித்தல்... என பனைச்சார்ந்த தொழில்களும் அருகி விட்டன.

இந்நிலையிலும், குலத்தொழிலை மறக்காமல் அதில் ஈடுபட்டு வருபவர்களில் ஒருவர், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தேவதாஸ். இவர் பல ஆண்டுகளாக பனங்கருப்பட்டி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அடைக்கலாபுரம் கிராமத்தில்தான் தேவதாஸின் பனந்தோப்பு உள்ளது.

லேசான பனிக்காற்றுடன் இளம்வெயில் அடித்துக்கொண்டிருந்த ஒரு காலைவேளையில் பொங்கல் சிறப்பிதழுக்காக தேவதாஸைச் சந்தித்தோம்.

“இந்த ஊர்தான் பூர்விகம். தாத்தா, அப்பானு எல்லாருமே பதநீர் எடுத்து காய்ச்சி கருப்பட்டி செய்து விற்பனை செய்ற தொழில்தான்  செய்தாங்க. எங்க அப்பா பனை மரம் ஏறவும் செய்வார். நான், பத்தாம் வகுப்பு வரை படிச்சிட்டு அப்பாவுக்கு உதவியா வந்துட்டேன். எனக்கு பனை ஏறத் தெரியாது. ஆனா, கருப்பட்டி, கல்கண்டு, சில்லுக்கருப்பட்டி காய்ச்ச தெரியும். அப்பாவுக்குப் பிறகு பத்து வருஷமா நானே தனியா கருப்பட்டித் தொழிலைப் பார்த்துக்கிட்டிருக்கேன்” என்ற தேவதாஸ் தொடர்ந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்