மண்புழு மன்னாரு: செந்நெல், செஞ்சாலிநெல்... ஸ்ரீராமானுஜர் சொல்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
மாத்தி யோசி, ஓவியம்: ஹரன்

ராமானுஜரின் வரலாறு’ வைணவ மதத்துக்குச் சொந்தமானது மட்டுமில்லீங்க... அது தமிழ்நாட்டோட வரலாறும்தான்! ராமானுஜர் பிறந்து ஆயிரம் வருஷம் ஆகப் போகுது. ராமானுஜர் சென்னைக்குப் பக்கத்துல இருக்கிற ஸ்ரீபெரும்புதூர்லதான் பொறந்தாரு. நாடு முழுக்க வைணவ சம்பிரதாயத்தை பரப்ப பயணம் செய்தாரு. தமிழ்நாட்டுல இருக்கிற முக்கியமான கோயிலான, ரங்கத்துல இருக்கிற, ரங்கநாதர் கோயில் நிர்வாகம் இப்படித்தான் நடக்கணும்ங்கிற செயல் திட்டத்தையே இவர்தான் வகுத்துக் கொடுத்திருக்கிறாரு. அதுசம்பந்தமா, ‘ஸ்ரீராமானுஜ ஆச்சார்ய திவ்ய சரிதை’யில பெரிய பட்டியலே இருக்கு. அதுல கோயிலில் உள்ள கடவுள்களுக்குக் கண்டருளப் பண்ணுவதற்கான (நிவேதனத்துக்குரிய) நெல் ரகங்கள் பத்தின விவரங்களையும் தெளிவா சொல்லியிருக்காங்க.

‘இப்பால் களஞ்சியங்களினருகே திருவரங்கனுக்குத் தகுதியாகத் திருவரங்கன் என்கிற நெல்லும், ரங்கராஜர் போகத் தளிகைக்குத் தகுதியான ராஜாந்த நெல்லும், நம்பெருமாளுக்குத் தகுதியான சம்பா நெல்லும், என் திருமகள் சேர் மார்பனுக்குத் தகுதியான சீரார் செந்நெல்லும், சேஷசாயிக்குத் தகுதியான வரம்புற்ற கதிர்ச் செந்நெல்லான செஞ்சாலி நெல்லும், மற்றும் பகவத் போக்யமான பஹுவ்ரீஹி வர்க ஸமூஹங்கள் (பலவகைப் பட்ட நெல் வகைகளும்) அளந்து களஞ்சியங்களிலே சொரியும்படி நியமித்து...’னு எழுதியிருக்காங்க. 

ராமானுஜரோட வாழ்க்கை வரலாற்றுல சொல்லியிருக்கிற செஞ்சாலிநெல், திருவரங்கன் நெல்லு...னு கோயிலுக்கு மட்டுமே இத்தனை ரகம்னா, மக்களோட பயன்பாட்டுல எத்தனை ரகம் இருந்திருக்கும்...! கால ஓட்டத்துல அந்த ரகம் எல்லாம் மறைஞ்சு போயிருக்கு. நெல் ரகம் மாறினாலும், ஸ்ரீரங்கம் கோயில்ல உள்ள மடப்பள்ளி உணவுத் தயாரிப்பு ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி இருந்த நடைமுறையிலேயே நடக்குது.

அரங்கன் ‘வெள்ளி பூணார்; வெண்கலம் ஆளார்’னு சொல்றாங்க. அதாவது தங்கம் தவிர வெள்ளியாலான நகைகளை அரங்கன் அணிய மாட்டாராம். பித்தளை, வெண்கலம்... போன்ற பாத்திரங்களைத் தளிகைக்குக்கூட (சமையலுக்கு) உபயோகிக்க மாட்டார்களாம். அரங்கனுக்கு ‘ஸ்வர்ண பாத்திரம்’ மூலம்தான் சமையல் நடக்குமாம். ஸ்வர்ணம்னு சொன்னவுடனே, தங்கம்னு நினைச்சிடாதீங்க. மண்பானையைத்தான் ஸ்வர்ண பாத்திரம்னு சொல்றாங்க. அதாவது, தினமும் புது மண்பாத்திரத்துலத்தான் அரங்கனுக்கு சமையல் நடக்குது. இதனாலதான், மடப்பள்ளி உணவுங்க, ஐந்து நட்சத்திர ஹோட்டல் சுவையைக்காட்டிலும் தூக்கலாவே இருக்குது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்