கேரளாவைக் கலக்கும் நீரா...

புத்துணர்ச்சி கொடுக்கும் புதிய பானம்!ஜி.பழனிச்சாமி, படங்கள்: த.ஸ்ரீநிவாசன்

மிழ்நாட்டில் கள் இறக்க தடை உள்ள சூழ்நிலையில், நமது அண்டை மாநிலமான கேரளாவில் பனையிலும், தென்னையிலும் கள் இறக்குவதற்குத் தடையில்லை. பனங்கள், தென்னங்கள் மற்றும் பனையில் இருந்து  கிடைக்கும் பதநீரும் கேரளாவில் ரொம்பவே பிரபலம். இந்நிலையில், கேரள மாநிலத்தில்... புதிய தொழில்நுட்பம் மூலம் தென்னங்கள் சேகரிக்கப்பட்டு, ‘நீரா’ என்ற பெயரில் போதை தராத பானமாக விற்பனை செய்யப்படுகிறது. மிகுந்த சுவையுடைய அந்த பானம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது.

இதுகுறித்துப் பேசிய பாலக்காடு பகுதியைச் சேர்ந்த ஜானு, ‘‘கேரளாவில் இதை ‘சர்க்கரைக் கள்’ என்கிறார்கள். இதைக் குடித்தால் போதை வராது. இது, உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும். பேருந்து நிலையம், ரயில் நிலையம், தபால் நிலையம் என மக்கள் கூடும் இடங்களில், ஸ்டால் அமைத்து இதை விற்பனை செய்து வருகிறோம். பொதுமக்கள் மட்டுமல்ல கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவியர்கள் இதை விரும்பிக் குடிக்கிறார்கள்” என்றவர் நமக்கு ஒரு நீராவைக் குடிக்க கொடுத்தார். வித்தியாசமான சுவையில் மிகவும் அருமையாக இருந்தது, அந்த பானம்.

இதை மக்களிடம் கொண்டுசேர்க்கும் பணியில் இருப்பவர்களில் ஒருவரான வினோத்குமார், “இது தென்னையில் இருந்து இறக்கப்படும் பானம். பாளையில் இருந்து வடியும் பாலை அப்படியே பானைக்குள் பிடித்து வைத்திருந்தால், அது கள். கள்ளைப் பருகினால், போதை கிடைக்கும். ஆனால், பாளையில் இருந்து வடியும் பாலை ஐஸ்கட்டிகள் நிரப்பப்பட்ட கலனில் பிடித்து அதை 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பதப்படுத்தி வைத்திருப்பதற்குப் பெயர் தான் நீரா. இது போதை தராது. குளிர் பதனப்பெட்டியில் மூன்று மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். ஆனால், இதன் வெப்பநிலை அதிகரித்து விட்டால், அது போதை தரும் கள்ளாக மாறி விடும். இதை குளிர் பதன வசதி செய்யப்பட்ட வாகனங்களில்தான் கொண்டு செல்ல முடியும். தற்போது, 100 மில்லி 12 ரூபாய் என்கிற விலையில் விற்பனை செய்கிறோம். தற்போது
50 ஆயிரம் தென்னை மரங்களில் இருந்து நீரா இறக்கி வருகிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்