5,800 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி...

ஏமாற்றத்தில் விவசாயிகள்!கு.ராமகிருஷ்ணன், படம்: க.சதீஸ்குமார்

 

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்’ என தேர்தல் அறிக்கையில் அ.தி.மு.க அறிவித்திருந்தது. அதன்படி ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றே, 5800 கோடி ரூபாயில் அளவுக்கான விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும், உத்தரவில் கையெழுத்திட்டிருக்கிறார், முதல்வர் ஜெயலலிதா.

5 ஏக்கர் வரை வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கியிருக்கும் பயிர்க்கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதனால் இந்த விவசாயிகள் குஷியாக இருக்கின்றனர். ஆனால், 5 ஏக்கர் அளவுக்கு மேல் நிலமுள்ள, கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கிய விவசாயிகளும், தேசிய வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றிருக்கும் சிறு குறு மற்றும் பெரு விவசாயிகளும் இதை ஏக்கத்துடன் பார்க்கின்றனர்.

இதுதொடர்பாகப் பேசிய சங்கத்தின் இணைச்செயலாளர் வரதராஜன், “கடந்த 5 ஆண்டுகளாக வறட்சி, மழை வெள்ளத்தால் விவசாயிகள் தொடர் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறோம். சிறு விவசாயிகளுக்கு கடன் சுமை இருப்பதுபோலவே 5 ஏக்கருக்கு அதிகமான நிலம் உள்ள விவசாயிகளுக்கும் கடும் கடன் சுமை உள்ளது. கடன் தொகையில் மட்டும்தான் மாறுபாடு. இடர்பாடுகள் அனைத்து விவசாயிகளுக்கும் ஒன்றுதான். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர்க்கடன் வாங்கிய விவசாயிகளும் கடன்களை அடைக்க முடியாத இக்கட்டில்தான் உள்ளார்கள். எனவே, அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தமிழக அரசு தள்ளுபடி செய்வதற்கு முயற்சி எடுக்க வேண்டும்” என்றார்.    

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் ‘சுவாமிமலை’ சுந்தரவிமலநாதன், இஸ்ரேல் போன்ற நாடுகளில் எல்லாம் விவசாயக் கடன்கள், மானியம் போன்றவற்றில் சிறு விவசாயி, பெரு விவசாயி என்ற பாகுபாடு பார்ப்பதில்லை. பெரு விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு பிரத்யேகமாக கூடுதல் விலை ஒன்றும் கிடைப்பதில்லையே. இடுபொருட்களின் விலையும் அனைத்து விவசாயிகளுக்கும் ஒன்றுதான். ஆனால், பெரு விவசாயிகளும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்கிய  அனைத்து விவசாயிகளும் வஞ்சிக்கப்படுகிறார்கள். கடன் சுமையினால்தான், சிலர் தற்கொலை முடிவுக்குக் கூட செல்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்