கிரிவலப்பாதை... வெட்டப்படும் மரங்கள்... கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்..!

கா.முரளி, நிகரன்

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள மலையையே லிங்கமாக கருதி பக்தர்கள் வணங்கி வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். ‘மலையைச் சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம், பக்தர்கள் இடையூறு இல்லாமல் கிரிவலம் செல்ல கிரிவலப்பாதை விரிவாக்கம் செய்யப்படும்’ என முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 110-விதியின் கீழ் அறிவித்து இருந்தார். அந்த அறிவிப்பில், ‘பக்தர்கள் கிரிவலம் செல்லும் பாதை 7 மீட்டர் அகலமாக இருக்கிறது, அது, 10 மீட்டராக மாற்றப்படும்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து கிரிவலப்பாதையை அகலப்படுத்தும் பணியில் இறங்கிய நெடுஞ்சாலைத்துறையினர், கிரிவலப்பாதையில் உள்ள பசுமை நிறைந்த மரங்களையும், மூலிகைச் செடிகளையும் வெட்டி சாய்க்கத் துவங்கியுள்ளனர். பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் இது, பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து, நம்மிடம் பேசிய, திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் அமைப்பின் தலைவர் செந்தமிழ் அரசு,

‘‘பவுர்ணமி, கார்த்திகை தீபம் மட்டுமில்லாம, வருஷம் முழுக்க பக்தர்கள் வந்துகிட்டே இருக்காங்க. இந்த மலையைச் சுத்தி கிரிவலம் வர்ற பக்தர்கள், மரங்களோட நிழல்ல, மூலிகைக் காத்தை சுவாசிச்சிக்கிட்டே நடக்கிறதை சிறந்த அனுபவமா நினைக்கிறாங்க. ஆனா, இப்ப, சாலையை விரிவாக்கம் செய்றோம்னு பழைமையான மரங்களையெல்லாம் வெட்டி சாய்க்கிறாங்க. திருவண்ணாமலை-செங்கம் சாலையில, எமலிங்கம் தொடங்கி, நுகர்பொருள் வாணிபக் கிடங்கு வரைக்கும் சுமார் 15-க்கும் மேற்பட்ட அந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத் திட்டாங்க. மாவட்ட நிர்வாகம் உடனடியா, சாலையோர மரங்களை வெட்டுறதை கைவிடணும். வெட்டுன மரங்களுக்கு பதிலா, குறுகிய காலத்துல வளரக்கூடிய மரங்களை நடணும்’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்