விலை இருக்கு... விளைச்சல் இல்லை... மானாவாரி கொண்டைக்கடலை..!

சந்தைக்கேற்ற சாகுபடி! லாப ஊருக்கு ஒரு வழிகாட்டி!துரை.நாகராஜன், படங்கள்: வீ.சிவக்குமார்

*கரிசல் மண்ணில் நல்ல மகசூல் கொடுக்கும்

*90 முதல் 100 நாட்களில் அறுவடை

*ஏக்கருக்கு 500 கிலோ மகசூல்

*புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் பயிரிடப்பட்டு தை, மாசி மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது.

*மண்ணில் பனித்துளி படரும் பிரதேசங்களில் நல்ல மகசூல் கிடைக்கும்.

*ஒரு கிலோ 60 ரூபாயிலிருந்து 70 ரூபாய் வரை விற்கப்படுகிறது

யல், விளைச்சலை அள்ளிக் கொடுத்திருந்தாலும்... சந்தையில் விலைகிடைத்தால்தான், லாபம் கிடைக்கும். ஒவ்வொரு பயிருக்கும் எந்தப் பருவத்தில் நல்ல விலை கிடைக்கும்... சந்தையின் தேவை என்ன? என்பது போன்ற அடிப்படையான சிலதகவல்களைத் தெரிந்துகொண்டால், ‘விலை இல்லை’ என்ற கவலையே இருக்காது. ஒவ்வொரு பயிருக்குமான சந்தைத் தகவல்களை அலசுகிறது, இத்தொடர். இந்த இதழில் கொண்டைக்கடலைக்கான சந்தை வாய்ப்புகள் இடம்பிடிக்கின்றன. கடந்த இதழில் இடம்பிடித்திருந்த கொண்டைக்கடலை குறித்த தகவல்களின் தொடர்ச்சி இங்கே...

கொண்டைக்கடலைக்கான விற்பனை வாய்ப்பு குறித்த தகவல்களை, உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் அழகிரி நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

‘‘தமிழ்நாட்டில் மேற்கு மாவட்டங்களான கோயம்புத்தூர், திருப்பூர், ஆகிய பகுதிகளில் இருந்து பரவலாக இந்த விற்பனைக்கூடத்துக்கு கொண்டைக்கடலை வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டுக்குப் பிறகு, வரத்து குறைந்துள்ளது. தற்போது 16 டன் மட்டுமே விற்பனைக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் பயிரிடப்படும் அளவும் குறைந்து வருகிறது.

இது கரிசல் மண்ணில் நன்றாக வளரும். பனிக்காலத்தில் பயிரிடப்படும் பயிராகும். ஆனால், அதிக உறைபனி, பயிரைப் பாதிக்கும். புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் பயிரிடப்பட்டு தை, மாசி மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது. அந்த மாதங்களில் பனியின் ஈரப்பதத்திலேயே கொண்டைக்கடலை வளர்ந்து விடும்.

“ஒரு ஏக்கருக்கு 40 கிலோ விதைகள் தேவைப்படும். அறுவடையாகும்போது 5 முதல் 6 குவிண்டால் வரை மகசூல் கிடைக்கும். மானாவாரியில் விதைக்கும்போது தொடர்ந்து ஈரப்பதம் இல்லாமல் இருந்தால் மகசூல் குறைவாகக் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

வியாபாரிகள் பூச்சித் தாக்காமல் இருக்கக்கூடிய, மாவுத்தன்மை அதிகமாகவும் இருக்கும் கொண்டைக்கடலையைத்தான் விரும்புகிறார்கள். இப்போது சந்தையில் கிலோ 63 ரூபாய் முதல் 65 ரூபாய் வரை விற்பனையாகிறது. குறிப்பாக கொண்டைக்கடலையை குளிர்பதனக் கிட்டங்கியில் வைத்து விற்பனை செய்தால் லாபம் அதிகமாக கிடைக்கும்.

2014-ம் ஆண்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் குவிண்டாலுக்கு 5 ஆயிரத்து 200 முதல் 5 ஆயிரத்து 500 ரூபாய் வரை விலைபோனது. அதன்பிறகு 6 ஆயிரத்து 350 முதல் 6 ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்பனையானது.

இப்போது வரத்து இல்லை, இனி, வரும் காலங்களில் வரத்து இருக்கும். சந்தையில் கொண்டைக்கடலைக்கு நல்ல விற்பனை வாய்ப்பு இருக்கிறது.  நல்ல நிறம் மற்றும் தரம் இருந்தால், விற்பனையில் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லை” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்