வாரம் 25 ஆயிரம் ரூபாய்.... மலைவாழை, கத்திரி, மிளகாய், கீரைகள்...

ஜீரோ பட்ஜெட் மலைத்தோட்ட சாகுபடி!ஜி.பிரபு, படங்கள்: வீ.சிவக்குமார்

பொறியாளர்கள், மருத்துவர்கள், தொழிலதிபர்கள்... என விவசாயத்தை விட்டு வெகுதூரம் ஒதுங்கி நின்றவர்கள் பலரையும் இயற்கை விவசாயத்துக்கு அழைத்து வந்ததில் பெரும்பங்கு ‘பசுமை விகட’னுக்கு உண்டு. அப்படி விவசாயத்துக்கு வந்த முதல் தலைமுறை விவசாயிகள் பலரையும் அவ்வப்போது அடையாளம் காட்டி வருகிறது, பசுமை விகடன். அவர்களில் ஒருவர் திண்டுக்கல் நகரைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணா.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குட்டி மலையான சிறுமலையில் முதன்முறையாக இயற்கை முறையில் மலைவாழை சாகுபடியில் இறங்கியிருக்கிறார், ராஜேஷ்கண்ணா. அதோடு, காய்கறிகளையும் இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறார்.

சிறுமலை, அகஸ்தியர்புரம் பகுதியில் உள்ளது ராஜேஷ்கண்ணாவின் தோட்டம். அகஸ்தியர்புரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து பத்து நிமிட நடையில் ராஜேஷ்கண்ணாவின் தோட்டத்தை அடையலாம்.  ஒரு காலைப் பொழுதில், பணியாளர்களுக்கு ஆலோசனை சொல்லிக்கொண்டிருந்த ராஜேஷ்கண்ணாவைச் சந்தித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்