நீங்கள் கேட்டவை: பண்ணைக்குட்டை வரவு... ஆழ்துளைக்கிணறு செலவு..!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

‘‘வறட்சியான எங்கள் பகுதியில், சுமார் 1,000 அடி வரை கூட ஆழ்துளைக் கிணறு எடுத்தோம். ஆனால், நீர் கிடைக்கவில்லை. இப்போது, நீர்வளத்தைக் கணிக்கும் நவீனக் கருவி மூலம் 2,000 ஆயிரம் அடி ஆழத்தில் உள்ள நீர்மட்டத்தைக்கூட அறியமுடியும் என்கிறார்கள், இந்த கருவியைப்  பயன்படுத்தி ஆழ்துளைக் கிணறு எடுக்க முடியுமா..?’’

மலர்கொடி, திருவண்ணாமலை.

திண்டுக்கல் வேளாண்மைப் பொறியாளர், பிரிட்டோ ராஜ் பதில் சொல்கிறார்.

‘‘தமிழ்நாட்டின் நிலவியல் அடிப்படையில், ‘நீர்த்தாங்கிகள்’ என்று அழைக்கப்படும் நீர்மட்டம் சுமார் 150-250 மீட்டர் ஆழம் வரையே உள்ளது. இதை அதிகபட்சமாக 800 அடி எனக் கொள்ளலாம். எனவே, 800 அடி ஆழத்துக்கும் அதிகமாக ஆழ்துளைக் கிணறு தோண்டினால், நீர் வரக்கூடும் ஆனால் மறுநாள் அந்த ஆழ்துளைக் கிணற்றில் நீர் இருக்காது. இதற்கு காரணம், 800 அடிக்கு கீழ் உள்ள பாறைகள், கடினதன்மை இல்லாத, பிளவு பாறைகள். இதனால், 500 அடியில் தண்ணீர் கிடைத்தும், மேலும் தண்ணீர் கிடைக்கும் என்ற ஆசையில், 800 அடிக்கு கீழே செல்லும்போது, பிளவுப்பாறைகள் வழியாக, அந்த நீர் கீழே சென்றுவிடும். ஏறத்தாழ ஓட்டைப் பானையில் நீர் ஊற்றி வைப்பது போலத்தான். எனவே, அதிக ஆழத்தில் ஆழ்துளைக் கிணறு தோண்டி பண விரயத்தைத் தேடிக்கொள்ள வேண்டாம்.

உங்கள் நிலத்தின் அருகில் ஒன்றை கிலோ மீட்டர் முதல் இரண்டரை கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள ஏரி, குளங்களில் நீர் இருந்தால் மட்டுமே, செறிவூட்டப்பட்ட ஆழ்துளை மற்றும் திறந்தவெளிக் கிணறுகளில் நிலத்தடி நீர் கிடைக்கும். எனவே, தங்கள் சுற்று வட்டாரத்தில் உள்ள நீர்நிலைகளை முறையாகப் பராமரித்தால், விவசாயத்துக்குத் தேவையான நீர் நிச்சயம் கிடைக்கும். மேலும் விவசாய நிலத்தில் 25 சென்ட் நிலத்தில் பண்ணைக்குட்டை வெட்டி, மழைநீரைச் சேமிக்கலாம். இதற்கு அதிகபட்சம் 30 ஆயிரம் ரூபாய்தான் செலவாகும்.
பண்ணைக்குட்டையில் உள்ள நீர், நிச்சயம் உங்களுக்கு உதவியாக இருக்கும். பண்ணைக்குட்டை அமைக்க, எங்கள் துறை மூலம் தொழில்நுட்ப ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் செய்து வருகிறோம். ஆகையால், அதிக ஆழத்தில் ஆழ்துளைக் கிணறு வெட்டி நஷ்டப்படுவதை விட, குறைந்த செலவில் பண்ணைக்குட்டை வெட்டி பலன் பெறுங்கள்.’’

தொடர்புக்கு, செல்போன்: 99444-50552.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்