30 கன மீட்டர் வண்டல் மண் இலவசம்!

விவசாயிகள் முயற்சி செய்தால் பலன் உண்டு... கு.ராமகிருஷ்ணன்

முற்காலங்களில் ஏரி, குளங்கள் வற்றும்போது அந்தந்தப்பகுதி விவசாயிகளே நீர்நிலைகளில் உள்ள வண்டலை எடுத்து வயல்களில் இட்டுக்கொள்வர். இதனால், நீர்நிலைகளும் முறையாகத் தூர் வாரப்பட்டு வந்தது. நிலங்களும் வளமாயின. காலம் காலமாக இருந்து வந்த இந்த நடைமுறையை மாற்றி, நீர்நிலைகளில் உள்ள மண்ணை அரசே எடுத்துக்கொள்ளும் முறை வந்த பிறகுதான்... நிலைமை தலைகீழாக மாறியது. முறையாகத் தூர் வாரப்படாததால் நீர்நிலைகள் தூர்ந்துபோனதோடு, வண்டல் மண்ணை விவசாயிகள் பணம் கொடுத்து வாங்கவேண்டிய நிலைமையும் உருவானது.

இந்நிலையில் அரசு விதியைப் பயன்படுத்தி, பழைய முறையை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளனர், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புதுக்குறிச்சி கிராம மக்கள். மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று, தங்கள் ஊர் ஏரியில் உள்ள வண்டல் மண்ணை தாங்களே எடுத்துப் பயன்படுத்தி வருகின்றனர், இந்தக் கிராம மக்கள். இதற்கு முன் முயற்சி எடுத்தவர், சூழலியலாளர் ரமேஷ் கருப்பையா.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய ரமேஷ் கருப்பையா, “ஏரி, குளங்கள்தான் விவசாயத்துக்கு ஆதாரமானவை. அவற்றை முறையாகத் தூர்வாரி வந்தால், ஆழப்படுத்தி தண்ணீரைச் சேமிக்க முடியும். தூர்வாரும் போது கிடைக்கும் வண்டலைப் பயன்படுத்தி, நிலங்களை வளமாக்க முடியும். வண்டல் மண்ணை வயலில் கொட்டும்போது, வயல் வளம் பெறும். ஆனால், சிறு கனிமங்கள் என்ற பட்டியலில் ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண்ணையும் வகைப்படுத்தி, விவசாயிகள் வண்டல் எடுக்க அரசு தடைவிதித்தது. இதனால், விவசாயிகளுக்கு ஏராளமான இழப்புகள். தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஏரி, குளங்கள் தூர்ந்து கிடக்கின்றன. அதனால், பாசனத்தை இழந்து... ஏராளமான நிலங்கள் தரிசாக மாறிக் கொண்டு வருகின்றன. இந்நிலையில், ‘வண்டல் எடுக்க அனுமதிக்க வேண்டும்’ என சில ஆண்டுகளாக விவசாய சங்கங்கள் கோரிக்கை எழுப்பி வந்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்