நெல்லுக்குக் கூடுதல் விலை...

‘அம்மாவும் அய்யாவும் போர்க்களத்துக்கு வாருங்கள்!’தூரன்நம்பி, படங்கள்: சு.குமரேசன், ஓவியம்: ஹரன்

‘நாட்டைத் தவறான பாதையில் வழிநடத்த ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்’ என்று சூளுரைக்கும் பிரதமர் மோடி, அதற்காகவென்று அவ்வப்போது சில திட்டங்களையும் அறிவித்து வருகிறார். ஆனால், நாடுநாடாகச் சுற்றி உரையாற்றி பாராட்டுமழையில் குளித்துக்கொண்டிருக்கும் பிரதமரால் நாட்டை எப்படி நல்ல பாதையில் கொண்டுபோகமுடியும்,  என்பதுதான் ஒட்டுமொத்த மக்களிடமும் எழும் கேள்வி. போதாக்குறைக்கு பிரதமரைச் சுற்றி ஊழலில் ஊறிப்போன அரசியல்வாதிகளும், ஆள் பார்த்து வாலாட்டும் அதிகாரிகளுமாக இருக்கும்போது வளர்ச்சிப்பாதை எப்படி சாத்தியமாகும்?  

இந்த ஆண்டு நாட்டில் மிகக் கொடூரமான வறட்சி நிலவுகிறது. 50 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையையும் தாண்டி வெயில் கொளுத்துகிறது. கிணறுகளில் தண்ணீர் இல்லை. ஆழ்குழாய்க் கிணறுகள்கூட வறண்டு போயின. சில பகுதிகளில் குடிக்கக்கூட நீர் இல்லாமல் திண்டாடுகிறார்கள், மக்கள். மழை இல்லாததால் ஆடு, மாடுகளுக்கு தீவனம் இல்லை. அத்தனை சோகத்தையும் மனதில் நிறுத்தி, நடைப்பிணமாய் வேதனையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், விவசாயிகள். பல மாநிலங்களுக்கு கிராமங்களில் இருந்து இடம்பெயரும் விவசாயிகள் நகரத்து தெருவோரங்களில் தஞ்சமடைந்து வருகிறார்கள். இப்படியே போனால், இன்னும் 30 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான கிராமங்கள் அழிந்து போய்விடும் என்று எச்சரிக்கிறார்கள், சூழலியல் ஆய்வாளர்கள். ஆனால், அத்தனையும் தெரிந்திருந்தும் இன்னமும் ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை மத்திய அரசு.

ஒரு குவிண்டால் நெல்லுக்கு குறைந்தபட்சம் 2 ஆயிரம் ரூபாய் அளவிலாவது கொள்முதல் விலை நிர்ணயிப்பார்கள்... என்று ஏங்கிக்கொண்டிருந்த வேளையில், இரக்கமே இல்லாமல் ஆயிரத்து ஐநூற்றிப் பத்து ரூபாய் என அறிவித்து தலையில் இடியை இறக்கினார்கள். நாட்டில் உள்ள 60 கோடி விவசாயிகளின் வாழ்வு அதலபாதாளத்தில் வீழ்ந்துகொண்டே இருக்கிறது. ஆனால், கூச்சமே இல்லாமல், மனசாட்சியே இல்லாமல், ‘நாடு வளர்கிறது’ என்கிறார்கள்.  இதையேதான் கடந்த காலங்களில் கதர் சட்டைகள் கூவிக்கொண்டிருந்தன. தற்போது காவிச்சட்டைகள் கூவுகின்றன. என்ன வளர்கிறது எப்படி வளர்கிறது என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம்.  ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் படிக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்