ஊசிப்புழு... தக்காளியைத் தாக்க வந்திருக்கும் புதிய வில்லன்!

ஆர்.குமரேசன்

*தென் அமெரிக்காவைச் சேர்ந்தது.

*2014-ம் ஆண்டில் கண்டறியப்பட்டது

*தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தாக்கம் அதிகம்.

டந்த மாதத்தில் திடீரென வரலாறு காணாத அளவுக்கு தக்காளியின் விலை உச்சத்துக்குச் சென்றது. விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும்... விளைச்சல் குறைவு என்று பொதுக் காரணம் சொல்லப்பட்டது. ஆனால், விளைச்சல் குறைந்ததற்கான ஒரு காரணி, தக்காளியைத் தாக்கிய தக்காளி ஊசிப்புழுக்களாகவும் இருக்கலாம், என விஞ்ஞானிகளால் கூறப்படுகிறது. உலகின் பல நாடுகளிலும் தக்காளி விவசாயிகளுக்கு சவால், இந்த ஊசிப்புழுதான். இப்புழு குறித்த விவரங்கள், அதைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து இங்கு விரிவாக விளக்குகிறார், தைவான் நாட்டில் உள்ள சர்வதேச காய்கறி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த முனைவர். இரா.சீனிவாசன்.

“வழக்கமாக, தக்காளி உற்பத்தியைப் பாதிக்கும் பூச்சி, நோய்களில்... தக்காளிக் காய்ப்புழு மற்றும் வெள்ளை ஈக்களின் மூலம் பரவும் இலைச்சுருள் வைரஸ் நோய் இரண்டும் முக்கியமானவை. இலைச்சுருள் வைரஸ்நோய், இளம்நாற்றுக்களைத் தாக்கினால், அந்தப் பயிர் முழுமையாக நாசமடைந்துவிடும். இருந்தாலும், தற்போது பிரபலமாக உள்ள பல்வேறு ரகங்களும் இந்த வைரஸ் நோய்க்கு எதிர்ப்புத் தன்மையைக் கொண்டிருப்பதால், பயிர் இழப்பு மிகக்குறைவுதான். அதேபோல, தக்காளிக் காய்ப்புழுவும் (பருத்தியைத் தாக்கும் அதே அமெரிக்கன் காய்ப்புழுதான்) எளிதில் கட்டுப்படுத்தக்கூடியதுதான். ஆனால், சமீபத்தில் இந்தியாவில் நுழைந்துள்ள புதிய வில்லன், ‘தென்அமெரிக்க தக்காளி ஊசிப்புழு’. இதன் அறிவியல் பெயர் ‘டியூடா அப்சலூடா’ (Tuta absoluta). இது, நிலக்கடலையைத் தாக்கும் சுருள்பூச்சி மற்றும் உருளைகிழங்கைத் தாக்கும் கிழங்கு அந்துப்பூச்சி ஆகிய பூச்சிகளின் குடும்பத்தைச் சார்ந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்